தண்ணீர் தாகம்…இந்த யானைகளுக்கு ஏற்பட்ட நிலையை பாருங்க… வீடியோ பாருங்க உங்கள் கண்களிலும் கண்ணீர் வரலாம்.!?

0

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கானகத்தில் இருந்து ஊருக்குள் வந்துவிட்ட சின்னத்தம்பி கிராம மக்களை ஒருவழிப்படுத்தியது நம் எல்லோருக்கும் நன்கு தெரியும். இதோ இப்போது இரு யானைகள் தண்ணீருக்கான படும்பாட்டை பார்க்கையில் சின்னதம்பிகளை உருவாக்குவதே மக்கள் தான் எனத் தோன்றுகிறது.யானைகள் பொதுவாகவே காட்டுப் பகுதியில் தான் வசித்து வருகின்றன. இதுபோக கோயில் பயன்பாட்டுக்காக பல கோயில்களிலும் யானைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதுபோக சில இல்லங்களிலும் கூட கோயில் திருவிழாக்களில் வாடகைக்கு விடுவதற்காக யானைகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

இங்கு யானைகளை வைத்து ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிளாஸ்டிக் போன்றவற்றின் கட்டுப்பாடற்ற பெருக்கத்தினால் இன்று வனமும் பெரிதாக சே தம் அடைந்து வருகிறது. கானகங்களிலேயே இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு நீராதாரங்கள் வறண்டு போக, அங்கு இருந்து தண்ணீர் தேடி நகர்ந்து வந்தது ஒரு தாய் யானையும், குட்டி யானையும்!

இவ்விரு யானைகளும் தண்ணீர் தாகத்தோடு தேடி அலைந்தும் குளம், குட்டை என எதுவும் இல்லை. ஒருகட்டத்தில் இந்த யானைகள் அப்பகுதியில் இருந்த அடி பைப் ஒன்றின் அருகே சென்று ஏ க்கத்துடன் நின்றன. இதைப் பார்த்த அப்பகுதி வாசி ஒருவர் அடிபைப்பில் தண்ணீர் அடிக்க, அந்த நீரை தன் துதிக்கையால் பிடித்து தாய் யானையும், குட்டி யானையும் பருகியது.

சூழல் விருத்தியாய் காணப்படும் கானகத்திலேயே தண்ணீர் தட்டுப்பாடு என்பது மானுட உலகுக்கு விடுக்கப்படும் சவால். இதை நாம் எப்படி எ திர்கொள்ளப் போகிறோம்? அந்த யானைகள் தண்ணீர் பருகும் வீடீயோவை பாருங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.