விவேக்குடன் காக்கா காமெடி காட்சியில் நடித்த நடிகரை நியாபகம் இருக்கா?- இப்போது எப்படி இருக்கார் தெரியுமா?

0

காமெடி நடிகர்கள்
தமிழ் சினிமாவில்பல நடிகர்கள் வருகிறார்கள், பின் சில படங்களுக்கு பிறகு அப்படியே காணாமல் போகிறார்கள்.அப்படி காமெடி நடிகர்கள் பலர் வந்துள்ளார்கள், சிலர் மட்டும் நிலைத்துள்ளார்கள். பலர் எங்கே இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள், இப்போது எப்படி இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை.சில ஹிட் காமெடி காட்சிகளில் நடித்து பிரபலமான நடிகரின் லேட்டஸ்ட் புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

லேட்டஸ்ட் போட்டோ
ஜீவாவின் ஆசை ஆசையாய் படத்தில் நடிகர் விவேக்குடன் சேர்ந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்தவர் காக்கா கோபால். மாதவன் நடிப்பில் வெளியான ரன் படத்தில் ரூ 5துக்கு பிரியாணி சாப்பிட்ட விவேக்கிற்கு காக்கா குரல் வந்துவிடும்.

அப்போது ரோட்டில் சென்று கொண்டிருக்கும் கோபாலிடம் ‘ஏப்பம் விட்டா காக்க குரல் வருது’ என்று விவேக் புலம்புவார், “காக்கா பிரியாணி சாப்பிட்டா காக்கா குரல் வராம, உன்னி கிருஷ்ணன் குரலா வரும்’ என்று கோபால் காமெடி டயலாக் ஒன்றை கூறியிருப்பார்.

அதன்பின் சிட்டிசன், தொடரும், ரன் என மொத்தம் 150 படங்களில் நடித்த காக்கா கோபால் அதன்பின் என்ன ஆனார் என்றே தெரியவில்லை.10வருட இடைவேளைக்கு பின் மீண்டும் நடிக்க வந்துள்ள காக்கா கோபால் 8 படங்களில் கமிட்டாகி குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.