வானிலிருந்து பெய்த பண மழை: பிரேசில் நகரம் ஒன்றில் மக்களுக்கு அ டி த்த அதிர்ஷ்டம் –

0

வறுமையில் வாழ்ந்து வரும் ஒரு நகரத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் கூரையைப் பொத்துக்கொண்டு வந்திருக்கிறது.பிரேசில் நாட்டில் அமைந்துள்ள Santa Filomena நகரத்தில் வாழும் 90 சதவிகிதம் மக்களும் விவசாயிகள்.சரியான வருமானமின்றி எப்படி இந்த மாத தேவைகளை சந்திப்பது என்று கலங்கியிருந்த மக்களுக்கு வானத்திலிருந்து பணமழை பெய்துள்ளது. ஆம், Edimar da Costa Rodrigues (20) என்ற மாணவர், திடீரென வானம் புகை மூட்டத்தால் சூழ்ந்துள்ளதை கவனித்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது நண்பர்கள் அவருக்கு வாட்ஸ் ஆப்பில் ஒரு செய்தி அனுப்பியிருக்கிறார்கள், அந்த செய்தியில் வானிலிருந்து பாறைகள் விழுவதாக அவர்கள் தெரிவிக்க, வெளியே சென்ற Rodriguesக்கு 164 கிராம் எடையுள்ள ஒரு கல் கிடைத்துள்ளது.

அவரைப்போலவே மக்கள் ஆங்காங்கு விழுந்துள்ள கற்களை சேகரித்துள்ளார்கள். அதிக பட்சமாக ஒருவருக்கு 40 கிலோ எடையுள்ள ஒரு கல் கிடைத்துள்ளது. அந்த கற்கள் சாதாரணமானவை அல்ல! அவை அபூர்வ விண்கற்கள், அதுவும் பூமி உருவாகுவதற்கு முன்பே சூரியக்குடும்பத்தில் காணப்பட்ட ஒரு வகை கற்கள் அவை. ஆகவே, அவற்றை ஆயிரக்கணக்கான பவுண்டுகள் கொடுத்து வாங்க பலர் தயாராக இருக்கிறார்கள்.

இந்த மாத மளிகை பாக்கியை கொடுப்பது எப்படி என்று கலங்கியிருந்த ஏழை மக்கள், ஒரே நாளில் பணக்காரர்களாகிவிட்டார்கள். Rodrigues, தனக்கு கிடைத்த கல்லை 1,000 பவுண்டுகளுக்கு விற்பனை செய்துள்ளார். மற்றொருவர் தனக்குக் கிடைத்த 2.8 கிலோகிராம் எடையுள்ள கல்லை 15,000 பவுண்டுகளுக்கு விற்பனை செய்துள்ளார்.

அந்த 40 கிலோ கல்லை விற்க பேரம் நடந்துகொண்டிருக்கிறது. இதில் இன்னொரு விடயம் என்னவென்றால், அந்த நகரத்திலுள்ள தேவாலயம் ஒன்றின் அருகில் பல பெரிய விண்கற்கள் கிடைத்துள்ளதால், இது கடவுள் அனுப்பிய பரிசு என மக்கள் கருதுகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.