வீட்டைத் திறந்தால் லட்சக்கணக்கில் பணம்… ஆனால் தெருவில் வசிக்கும் பெண்கள்! காரணம் என்ன?

0

சாலையோரத்தில் வாழும் 3 சகோதரிகளுக்கு 2,40,000 ரூபாய் மற்றும் தங்க நகைகள் கிடைத்துள்ள சம்பவம் ஆ ச் சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆ தரவற்ற நிலையில் இருக்கும் ராஜேஸ்வரி (65), விஜயலட்சுமி (60), மற்றும் மகேஸ்வரி என்ற பிரபாவதி (57) ஆகிய மூன்று சகோதரிகள் குப்பைகளை சேகரித்து அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் மூன்று சகோதரிகளில் இளையவரான பிரபாவதி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நடைபாதையில் இ ற ந்த நிலையில், பொ லிசார் ஒருவரின் உதவியுடன் அ டக்கம் செய்துள்ளனர். அதைனையடுத்து ராஜேஸ்வரி மற்றும் விஜயலக்ஷ்மி வீட்டிற்கு செல்லாமல் சாலை ஓரத்திலேயே தங்கி வந்த நிலையில், அவரிடம் வி சா ரணை நடத்தியுள்ளனர்.

அப்பொழுது வீடு இருப்பதாகவும் அங்கே சென்றால் தூங்க முடியாது என்றும் கூறியதையடுத்து பொலிசார், இருவரையும் அழைத்துக்கொண்டு குடிசை மாற்று வாரிய குடியிருப்பிற்கு சென்றுள்ளனர்.
அங்கு வீடு முழுவதும் குப்பைகள் நிறைந்திருந்த நிலையில், அதனை சுத்தம் செய்து பார்த்த போது ஆங்காங்கே பணம் சிதறிய நிலையிலும், பைகள் மற்றும் பிளாஸ்டிக் பைகளில் சில்லரைகள் குவிந்து கிடந்ததையும் அவதானித்தனர்.

இவற்றினை எண்ணிப்பார்த்த போது சுமார் 2,40,000 ரூபாய் இருந்துள்ளதாகவும், இதில் செல்லாத நோட்டுகளான 500 மற்றும் 1000 நோட்டுகள் 40 ஆயிரத்திற்கும் இருந்துள்ளது. மேலும் 7 பவுன் நகைகளும் இருந்துள்ளது.இதைக் குறித்து எந்த புரிதலும் இல்லாத மூதாட்டிகள் அதை பயன்படுத்தாமல் சாலையோரம் உணவிற்காகவும், தங்க இடம் இல்லாமலும் த வி த்து வந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் ஆ ச் சர்யம் அடைந்தனர்.

காவல்துறையினர் வீட்டை முழுமையாக சுத்தம் செய்த பிறகு பாட்டிக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்த பின், பாட்டிகளுக்கு சொந்தமான நகைகளையும், பணங்களையும் அவர்களிடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.