ஏழை சிறுவனுக்கு அ டி த்த அதிர்ஷ்டம்! உ ச் சக்கட்ட மகிழ்ச்சியில் நடிகர் லாரன்ஸ்… தீயாய் பரவும் பதிவு

0

நடன இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் லாரன்ஸ்.நடந்திருக்கு பிரபு தேவாவிற்கு அடுத்த படியாக தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடன இயக்குனர் என்றால் அது லாரன்ஸ் மட்டுமே.!தமிழில் அற்புதம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார்.பின்பு சில வருடங்களுக்கு பிறகு முனி திரைப்படத்தில் நடித்து அந்த திரைப்படம் வெற்றி பெற அந்த திரைபடத்தில் 4 பாகங்களை எடுத்து அணைத்து பாகங்களும் வெற்றி பெற்றன.அது மட்டும் அல்லாமல் மேலும் பல படங்களை நடித்துள்ளார்.இன்று இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது,அதற்க்கு காரணம் இவர் செய்யும் நல திட்ட உதவிகளும் ஒன்று.

தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் தங்களுக்கு வரும் அதிகப்படியான பணத்தால் மற்றவர்களுக்கு உதவி வருகின்றனர். ஆனால், ஆதரவற்ற குழந்தைகளுக்கும் உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவர் ராகவா லாரன்ஸ். அதற்கென தனியாக ஒரு டிரஸ்ட் வைத்து நடத்தி வருகிறார்

நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார்.சில தினங்களுக்கு முன் லாரன்ஸ் அறக்கட்டளை சார்பில் உணவு பெற்ற சிறுவன், அவரது போஸ்டருக்கு அன்புடன் முத்தம் கொடுக்கும் போட்டோ வைரல் ஆனது.
அதை பார்த்த லாரன்ஸ், ”இந்த போட்டோ, எனக்கு விருது கிடைத்த உணர்வை கொடுக்கிறது” என பதிவிட்டார்.

இதையடுத்து தனது ரசிகர் மன்றம் மூலம் அந்த சிறுவனைகண்டுபிடித்திருக்கிறார்.
இது குறித்து தனது ட்விட்டர் பதிவில், ”இந்த சிறுவனை பார்க்கும் போது சிறு வயதில் என்னை பார்த்தது போல இருக்கிறது.

நானும் இதுபோல் தான் கஷ்டமான சூழலில் வளர்ந்தேன். இந்த சிறுவனை காண ஆவலாக உள்ளேன். இவனுக்கு ஏதாவது ஸ்பெஷலாக செய்ய வேண்டும்” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது தீயாய் பரவி வருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.