இட்லி சுட்டு லட்சங்களில் சம்பாதிக்கும் இளைஞர்!.. ஒருநாள் வருமானம் மட்டும் என்ன தெரியுமா?

0

ஆதிகாலம் தொட்டே தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று இட்லி, 6 மாத குழந்தை முதல் 60 வயது பாட்டி வரை எளிதாக செரிமானம் ஆகிவிடும். அத்தகைய இட்லியை தயாரித்து மாதம் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டுகின்றார் சென்னையை சேர்ந்த ரமேஷ். ஒரு லட்ச ரூபாய் கடனோடு சென்னை வந்த ரமேஷ், இன்று பலதரப்பட்ட உணவகங்கள், விசேஷங்களுக்கு இட்லியை விற்பனை செய்து வருகிறார். எம்.ஏ முடித்துவிட்டு பல நிறுவனங்களில் வேலை பார்த்து வந்த ரமேசுக்கு, போதிய வருமானம் இல்லாததால் சொந்தமாக ஏதாவது செய்யலாம் என்ற எண்ணத்தில் சென்னை வந்துள்ளார்.
இங்கே அவரது சித்தி ஹொட்டல் ஒன்றில் வேலை பார்த்துள்ளார், அப்போது வீட்டு இட்லி தயாரிக்க ஆள் தேவைப்பட்ட போது, தாமாக முன்வந்து மனைவியுடன் ரமேஷ் சேர்ந்து இட்லி தயாரித்துள்ளார்.

இவர்களது கைப்பக்குவத்தில் சுவையான ருசியான மற்றும் மிருதுவாக இட்லி இருந்ததால் தொடர்ந்து ஆர்டர்கள் குவிந்துள்ளன. இதனை தொடர்ந்து குடும்பம் சகிதமாக இட்லி தயாரிப்பில் ஈடுபட்டதுடன், அனைத்திற்கும் மிஷின்களை நிறுவியுள்ளார்களாம்.

அயராத உழைப்பின் விளைவால் தற்போது ஒருநாள் வருவாய் மட்டும் ரூ.20,000 ஆயிரத்தை ஈட்டும் ரமேஷ், தினந்தோறும் குறைந்தது 35,000 இட்லிகளை தயார் செய்து வருகிறார்களாம். தொடக்கத்தில் இட்லி சுட்டதால் கேலி செய்த சமூகம்
இன்று அவரை ஏறேடுத்து பார்ப்பதாக பெருமை கொள்கிறார் ரமேஷ். செய்த தொழில் எதுவாக இருந்தாலும் நம் முழு அர்ப்பணிப்புடன் அயராது பாடுபட்டால் வெற்றி நிச்சயம் என்பதற்கு ரமேசும் ஒரு எடுத்துக்காட்டே!!!…

Leave A Reply

Your email address will not be published.