36 வருடங்களுக்கு பிறகு முந்தானை முடிச்சு ரீமேக்… பாக்கியராஜ் க்கு பதிலாக இந்த முன்னணி  நடிகர்தான் ஹீரோவாம்! யார் தெரியுமா.?

0

பாக்யராஜ் ஒன்றும் ‘சிறந்த நடிகர்’ கிடையாது. ஆனால் அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தை just like that செய்துவிடுவார். அதேசமயம் அவருக்கு காமெடி கலந்த வேடம் அமைந்து விட்டால், மனிதர் கலக்கி விடுவார். இந்த படத்தில் பல இடங்களில் அருமையாக ஸ்கோர் செய்கிறார் பாக்யராஜ். ‘முருங்கைக்காய்’ சாப்பிட்டுவிட்டு மனைவி பாடும் பாடலை கேட்டு ‘ஏய், என்ன இது? தாலாட்டா?’ என்று டென்ஷன் ஆகும் இடம் செம காமெடி. அதை விட பெரிய காமெடி, பாக்யராஜ் ஆடும் டான்ஸ். மற்றபடி அவரின் இயல்பான அந்த ‘திருட்டு முழி’ பாக்யராஜை ரசிக்கும் அனைவருக்கும் அது ‘All time Favorite Look’.பாக்யராஜின் மனைவியாக ஊர்வசி. ஊர்வசியை பற்றி ஏற்கனவே என் முதல் பதிவான ‘மைக்கல் மதன காம ராஜன் – என் பார்வையில்’ திரை விமர்சனத்தில் எனக்கு பிடித்த நடிகை என்று சொல்லியிருக்கிறேன்.

ஊர்வசி அழகாக நடித்துள்ளார் இந்த படத்தில். இத்தனைக்கும் இந்த படம் அவரின் முதல் படமாம். நடிகர் கமல்ஹாசனே தன் படங்களில் இவர் எப்படி நடிக்கிறார் என்று பார்த்துவிட்டு தான் கமல் நடிக்க ஆரம்பிப்பார். சில சமயங்களில் கமலையே over take செய்து விடுவார் ஊர்வசி என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். படத்தில் முதல் பாதியில் குறும்புகார பெண்ணாகவும், பிற்பாதியில் தன் கணவனின் அன்பிற்காக ஏங்கும் மனைவியாகவும் அருமையாக நடித்துள்ளார்.

டீச்சர் பட்டுவாக தீபா. எனக்கு தீபாவை பார்க்கும்போதெல்லாம் இவர் ‘1980’s நமீதா’ என்று நினைத்துக்கொள்வேன். காரணம் அவரின் உடல்வாகு. இந்த படத்தில் இவரை பல இடங்களில் முக்கிய கதாபாத்திரமாக ‘நடிக்கவும்’ வைத்துள்ளார் இயக்குனர். சிறுவனாக வரும் தவக்களை, பக்கத்து வீட்டு பெண்ணாக வரும் கோவை சரளா மற்றும் பாக்யராஜின் முன்னாள் மனைவியாக கௌரவ வேடத்தில் நடித்துள்ள பூர்ணிமா பாக்யராஜ் என்று படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள்.

படத்துக்கு இசை இசைஞானி இளையராஜா. வழக்கம் போல இந்த படத்திலும் பாடல்கள் அருமை. குறிப்பாக ‘கண்ண தொறக்கணும் சாமி’ பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுமட்டுமல்ல, இளையராஜா பாக்யராஜ் முதன்முதலாக இணைந்தது இந்த படத்தின் மூலமாகத்தான்.

படத்தை தயாரித்தது AVM. அன்றைய காலகட்டங்களில் AVM இன் ஆஸ்த்தான இயக்குனர் யாரென்றால், திரு.S. P. முத்து ராமன் தான். ஆனால் முதன்முதலில் வெளியில் இருந்து வந்து AVM இற்கு டைரக்ட் செய்த முதல் இயக்குனர் கே. பாக்யராஜ் தான்.

படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் திரு. கே. பாக்யராஜ். இவரிடம் இருந்த பவர், ரசிகனின் ‘நா டி யை’ தெரிந்து வைத்திருப்பது. அது தான் இவருக்கு இன்றளவிலும் பெயர் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. சும்மாவா? பு ர ட்சி தலைவர் எம்.ஜி.யாரின் ‘கலை வாரிசு’ ஆயிற்றே.

இந்த படம் 1983 அன்று வெளிவந்தது. அந்த வருடத்திலேயே அதிகமாக வ சூல் சாதனை செய்த படம் இந்த ‘முந்தானை முடிச்சு’. இந்த படத்தின் சிறந்த நடிகராக அந்த வருடத்திற்கான Filmfare விருது பெற்றார் பாக்யராஜ். இன்றும் பாக்யராஜ் போல ஒரு குடும்ப பாங்கான இயக்குனர் கிடைப்பாரா என்று எதிர்பார்க்கிறோம்.

இந்த நிலையில் தற்போது 36வருடங்கள் கழித்து முந்தானை முடிச்சு திரைப்படத்தை ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளார் அதற்கான பேச்சு வார்த்தை தாற்போது இடம்பெற்று வருகின்றது இதற்கான உரிமையை AVM. சரவணனிடம் இருந்து JSP நிறுவனம் வாங்கியுள்ளது இப்படத்தை பாக்கியராஜ் இயக்குவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது இதில் ஹீரோவாக சசிக்குமார் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.