மீடியாக்களின் பார்வையில் இருந்து குடும்பத்தை மறைத்த நடிகர் கவுண்டமணி – 15 சுவாரஷ்ய தகவல்கள்

0

சிரிப்பு அலை, மீம்ஸ்களின் நாயகன், க ண்ணீரிலும் காமெடி என்று தனது பெயருக்கு பின்னால் பட்டங்கள் இல்லை என்றாலும், அவரை பற்றி அவ்வளவு சொல்லலாம்.இன்று இளைய சமுதாயம் உருவாக்கி வரும் பல மீம்ஸ்களில் கவுண்டமணி முக்கிய அங்கமாக உள்ளார். அத்தகைய நபரை பற்றிய 15 தகவல்கள் பார்க்கலாம்.

1. 1939ஆம் ஆண்டு மே 25ஆம் நாள், கோயம்புத்தூர் மாவட்டம் வல்ல குண்டாபுரம் என்று சிற்றூரில் திரு கருப்பையா தம்பதிகளுக்கு சுப்பிரமணி(கவுண்ட மணி) எனும் இயற்பெயருடன் பிறந்தார். இவருக்கு மூத்த சகோதரியும் உள்ளார்.

2. சிறுவயத்திலிருந்து நாடகங்களில் நடிக்கும் ஆர்வம் கொண்ட இவர், படிப்பில் அக்கறை செலுத்தவில்லை. இதனால் ஊர்களில் நாடகம் நடிக்கும் பணியை துவங்கினார். அந்த வகையில், ஊர் கவுண்டர் என்ற நாடகத்தில் கவுண்டர் வேடம் பூண்டு சிறப்பாக வசனங்கள் பேசியுள்ளார். நாடகம் முடித்தது, பேசிய ஊர்காரர் ஒருவர், சுப்பிரமணி சிறப்பாக நடித்தார். எனவே அவரை இனி கவுண்ட மணி என்று அழைக்கலாம் என்று பட்டம் சூட்டியுள்ளார்.

 

 

3. பெயர் கவுண்டமணி என்று பொது இடங்களில் அறியப்பட்டாலும், சுப்பிரமணி என்றே அழைத்து வந்தனர். ஆனால், இவர் மற்றவர்கள் பேசும்போது கவுண்டர் கொடுத்து சிரிக்க வைத்து வந்ததால், பின்நாட்களில் பெயர் கவுண்டமணி என்று முற்றிலும் மாறியுள்ளது.

4. தற்போது பஞ்சு டயலாக்குகளால் காதுகளை கிழிய வைக்கும் கவுண்டமணி சிறுவயதில், அதிகம் பேசாமல் அமைதியாகவே இருப்பாராம். மேலும், அவ்வாறு பேசினாலும் குழந்தைகளை போல் மெதுவாக பேசும் தன்மை கொண்டவராக இருந்துள்ளார்.

5. தனது 15வது வயதில், நாடகத்தில் நடிக்க போகிறேன் என்று தொடர்ந்து அடம்பிடித்து வந்ததால், அவரது சகோதரி கவுண்டமணியை சென்னைக்கு அழைத்து வந்து பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்த்துவிட்டு சென்றுள்ளார். அதன் பின் பல நாடக கம்பெனிகளில் நடித்துள்ளார் கவுண்டமணி

6. தன்னுடைய 26வயது வயதில், நகேஷ் கதாநாயகனாக நடித்த சர்வசுந்தரம் படத்தில், கால்பதித்த இவர் அதில் ஒரு வசனம் கூட பேவில்லை. கூட்டத்தில் ஒருவராக மட்டும் வந்து செல்லும் காட்சியில் இடம் பெற்றுள்ளார். அதன்பின், சிவாஜி நடித்த ராமன் எத்தனை ராமனடி என்ற படத்தில் தனது முதல் வசனத்தை பதிவு செய்யுள்ளார் கவுண்டமணி.

7. 16வயதினிலே என்ற படத்தில் “பத்த வைச்சிட்டியே பரட்ட” என்னும் வசனத்தின் மூலம் பிரபலமான கவுண்டமணி, அதன்பின் ஏராளமான வசனங்கள் மூலம் தன்னை தமிழ் திரையுலகில் அடையாளப்படுத்தினார்.

8. நடிகர் கவுண்டமணி சாந்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு செல்வி, சுமித்திரா என்ற இரு மகள்கள் உள்ளனர் என்பது அவரின் மூத்த மகள் திருமணத்தின்போது தான் பலருக்கும் தெரியவந்துள்ளது. அந்தவகையில், மீடியாக்கள் பார்வை தன் குடும்பத்தின் மீது திரும்பாத வகையில் இருந்துள்ளார் கவுண்டமணி

 

 

9. 750க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த கவுண்டமணி, 12 படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். அந்த படங்களில், செந்திலுடன் இணைந்து 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கவுண்டமணி

10. கறுப்பாக இருப்பவர்களையும், வ ழுக்கை தலையுடன் இருப்பவர்களையும் படங்களில் கி ண்டல் செய்த கவுண்டமணியும் கறுப்பான நிறமும், வ ழுக்கை தலையும் கொண்டவர் தான்.

11. சினிமாவில் பல சென்டீமன்ட் விஷயங்கள் அதிகம் கைபிடிப்பது உண்டு. குறிப்பாக பூஜைகளில். ஆனால், கவுண்டமணி படத்தின் பூஜைக்கு பெரும்பாலும் கறுப்பு நிற ஆடையைதான் அணிந்து செல்வார். அவரிடம் யாராவது வந்து இது குறித்து கேட்டால் “இங்கிலீஷ் கலருடா ப்ளேக்” என்பாராம்.

12. பு கைப்பழக்கம் இல்லை, கு டிபழக்கம் இல்லை, பா ர்டிகளில் கலந்து கொள்ளமாட்டார், வீட்டில் பிறந்தநாள் பார்ட்டிக்கே யாரையும் அழைக்கவும்மாட்டார். பெயருக்கு முன்னால் எந்த பட்டமும் இல்லை. யாராவது இது குறித்து கேட்டால் “சார்லி சாப்ளின் அளவுக்கா சாதனை பண்ணிட்டோம்… அவருக்கே பட்டம் கிடையாது” என்பாராம்.

 

 

13. பொதுவெளியில் செல்லும் போது யாராவது கவுண்டமணி வருகிறார் என்று வியந்து பார்த்தால், நடிகனும் மனுஷன்தான். ஒரு மனிதனுக்கு கொடுக்கும் மரியதையை மட்டும் கொடுங்கள் என்று கூறுவாராம்.

14. அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியில் அடுத்த இடத்தை பிடித்த கவுண்டமணி ஆடம்பரத்தை விரும்புவதில்லை. ஆனால், சொந்தமாக 10 கார்கள், ஏராளமான கூலிங் கிளாஸ்கள், கடிகாரங்கள் சேமித்து வைத்துள்ளார்.

15. கடவுள் மீது தீ விர பக்தி கொண்டாலும், போ லிசாமியார்களை தன் அருகில் நெருங்க விடமாட்டார். இவர்கள் சாமி பெயரை சொல்லி ஏமாற்றுகிறார்கள் என்று வெளிப்படையாகவே கூறுவாராம். ஓசோவின் புத்தகங்களை விரும்பி படிப்பாராம். அதோபோல் ஹோலிவுட் படங்களை தவறாமல் பார்த்து தனது நன்பரான நடிகர் சத்தியராஜிடம் பகிர்ந்து கொள்வாராம்.

Leave A Reply

Your email address will not be published.