குழந்தையாக ஜில்லா படத்தில் விஜய்யுடன் நடித்தவர் எந்த சீரியலில் நடிக்கிறார் தெரியுமா? புகைப்படங்கள் உள்ளே

0

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் தளபதி விஜய். உலகெங்கும் இவருக்கு பல கோடி ரசிகர்கள் உள்ளனர். சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் மாஸ்டர். கொரோன காரணமாக மாஸ்டர் பட ரிலீஸ் தள்ளிவைக்கப் பட்டுள்ளது.

இதன்பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 65வது விஜய் படத்தை நடிக்க போகிறார். விஜய்யின் ஜில்லா படம் வெற்றிபெற்ற ஒரு படம். மோகன்லால், காஜல், சூரி என பல நடிகர்கள் நடித்திருப்பார்கள். இதில் ஒரு காட்சியில் குட்டி பெண் வெடிகுண்டு விபத்தில் சிக்குவார். பின் அவரை விஜய் மருத்துவமனையில் சேர்த்து அந்த குழந்தையை சந்திப்பார். குழந்தை நட்சத்திரமாக அந்த காட்சியில் நடித்திருந்தவர் ரவீனா.

இவர் இப்போது என்ன செய்கிறார் தெரியுமா, அதாவது இவர் இப்போது ஒரு சீரியலில் நடித்து வருகிறாராம். எந்த சீரியல் என்றால் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பூவே பூச்சூடவா என்றதில் நடித்து வருகிறார். அண்மையில் இவர் இன்ஸ்டாவில் பதிவு செய்திருக்கும் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.