குடிசை வீட்டில் வாழ்ந்த முல்லை!.. பெற்றோரை பெருமைப்பட வைத்த நெகிழ்ச்சி தருணம்

0

தொகுப்பாளினியாக அறிமுகமாகி சின்னத்திரையே கலக்கி கொண்டிருப்பவர் சித்ரா. நடனம், நடிப்பு என பன்முக திறமை கொண்ட சித்ராவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம், மிகவும் க ஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறிய நடிகை.அவருடைய பெர்ஷனல் வாழ்க்கை பற்றி பகிர்ந்துள்ள தகவல்களில், நான் தான் வீட்டுக்கு கடைசிப் பொண்ணு.குழந்தையே வேண்டாம்னு என் பெற்றோர்கள் முடிவெடுத்து வயிற்றுக்குள் இருக்கும் போதே என்னனமோ செய்தும் அனைத்து உடைத்தெறிந்து விட்டு பிறந்தவள் நான். எங்களுடைய தலைமுறையில் படித்த பட்டதாரி பெண் நான் தான், மீடியாவுக்கு அனுப்பவே மாட்டேன்னு கராறாக சொல்லியும் எப்படியோ சமாளித்து இங்கு வந்து விட்டேன்.

ஆரம்ப காலத்தில் குடிசையில் தான் நாங்கள் வாழ்ந்து வந்தோம், பின்னர் அரசாங்கத்தின் குடிசை மாற்று வாரியம் மூலமாக எங்களுக்கு வீடு கட்டி கொடுத்துட்டாங்க.ரொம்ப சின்ன வீட்டில் நாங்கள் வசித்தோம், அப்பவே என் பெற்றோரை ராஜா ராணி மாதிரி வாழ வைக்கணும்னு எனக்கு நிறையவே ஆசை.

இதற்காக ஒவ்வொரு நாளும் க ஷ்டப்பட்டு உழைப்பேன், கிடைக்கிற வாய்ப்பை எல்லாம் சரியான பயன்படுத்திக் கொண்டு கொஞ்சம் கொஞ்சம் பணம் சேர்த்து முதலில் கார் வாங்கினேன். படிப்படியாக அப்பா, அம்மாவுக்காக வீடு கட்டிக் கொடுத்திருக்கிறேன். தனி வீடா இருந்தா அவங்க மட்டும்தான் இருக்க முடியும். அவங்க வீட்டிலிருந்தே சம்பாதிக்கிற மாதிரி எங்க வீட்டுக்கு பக்கத்துலேயே இரண்டு சின்ன வீடு கட்டினேன்.

அந்த வீடுகளை வாடகைக்கு விட்டுட்டு அதில் கிடைக்கிற பணத்தை வைச்சு அவங்க உட்கார்ந்து சாப்பிட வழி ஏற்பாடு பண்ணிட்டேன். இப்போ என்னைப் பெண் பிள்ளையா பெத்ததுக்கு என் அம்மாவும், அப்பாவும் பெருமைப்பட்டுட்டு இருக்காங்க என நெகிழ்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.