நண்டு பிடித்துக்கொண்டிருந்த சிறுமி.. திடீரென வந்த முதலை.. பார்த்ததும் தந்தை செய்த அதிரடி செயல்.

0

வாழ்க்கையில் நாம் எப்போதும் எதிர்பார்ப்பது மட்டுமே நடந்து கொண்டு இருக்காது. திடீர், திடிரென வினோதமாகவும் ஏதாவது நடந்துவிடும். அப்படித்தான் இங்கே சிறுமி ஒருவர் நண்டு பிடிக்கப் போக ஏதேதோ நடந்துவிட்டது. அவரது தந்தை இருந்ததால் சிறுமி அதிர்ஷ்டவசமாக உ யிர் தப்பினார். இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். ‘டெக்சாசியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. தங்கள் வீட்டின் பக்கம் உள்ள நீரோடையில் நண்டு, மீனை விளையாட்டாக ஒரு குடும்பத்தினர் பிடித்துக் கொண்டிருந்தனர். குடும்பத்தின் தலைவரான தந்தை ஆண்ட்ரு, தன் குழந்தைகள் பிராண்ட்லின் கிரண்டியும், அவளது அண்ணனும் கூடவே ஒரு இளம்பெண்ணும் சேர்ந்து விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஏதேச்சையாக அவர் அவரது கண்ணில் நீரோடையில் செல்லும் முதலை ஒன்று கண்ணில்பட்டது.

அப்போது திடீரென அந்த முதலை நீரோடையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களை நோக்கி வருவதை ஆண்ட்ரூ கவனித்தார். அவரது நான்கு வயது மகளை நோக்கி பத்தடி இடைவெளியில் முதலை நெருங்கிவிட்டது. திடீரென அது தண்ணீரில் மூழ்கிவிட அடுத்து எப்படியும் தன் மகளை நோக்கி பாயும் என யுகித்த தந்தை ஆண்ட்ரூ, குழந்தையோடு இருந்தவர்களை கதவு வழியாகத் தன் வீட்டுத் தோட்டத்துக்குள் தள்ளிவிட்டு, குழந்தையையும் தூக்கி வேலிக்கு அப்பால் வீசியிருக்கிறார்.

அந்த முதலை பாயுமா என்றெல்லாம் யோசிக்காமல் இதை தந்தையாக உடனே செய்தார் ஆண்ட்ரூ. இந்தக் காட்சிகள் இப்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. தொடர்ந்து வனத்துறைக்கும் ஆண்ட்ரூ தகவல் கொடுத்தார். அவர்கள் அரை மணிநேர போராட்டத்துக்குப்பின் 600 பவுண்ட் எடை உடைய அந்த ராட்சச முதலையை மீட்டனர். ஒருவேளை அது குழந்தையை நோக்கி பாய்ந்திருந்தால் அந்த வேலியையே உடைத்திருக்கும். அதன் எடை அவ்வளவு என்கிறார் குழந்தையின் தந்தை ஆண்ட்ரூ.

Leave A Reply

Your email address will not be published.