திரு மண மா ன சி ல வருடங் களி லே யே மு தல் ம னைவி மர ண ம் . ..! !! இன் று வ ரை அவ ரின் நி னை வாக பாக்ய ரா ஜ் வைத் திருக் கும் பொ ருள் .. .!! ! இணை யத்தி ல் வெ ளி யா ன தக வலை கண் டு க ண் கல ங் கிய ரசி கர்க ள் . ..! !!

0

தமிழ் சினிமா உலகில் ஒரு காலகட்டத்தில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் தான் இயக்குனர் கே பாக்யராஜ் அவர்கள். ஆரம்பத்தில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே என்ற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார் . பின்னர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புதியவார்ப்புகள் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் பாக்யராஜ் . இதையடுத்து கடந்த 1979ஆம் ஆண்டு வெளியான சுவரில்லாத சித்திரங்கள் என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார் . இப்படி வெளியான இந்த திரைப்படம் ந ல வரவேற்பை பெற்றது . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஒரு கை ஓசை, இன்று போய் நாளை வா, அந்த 7 நாட்கள், முந்தானைமுடிச்சு, தாவணி கனவுகள் ஒன்ற பல படங்களை இயக்கிய ரசிகர்களிடைய பிரபலமானார் . குறிப்பாக பாக்யராஜ் திரைக்கதையை கையாள்வதில் வல்லவர் என்று கூட சொல்லலாம் .தனது முதல் இரண்டொரு படங்களுக்குப் பிறகு, பாக்யராஜ் அப்போது  து ணை க் கதா பா த் தி ர ங்க ளி ல்   ந டித்து வந்த “பிரவீணா” என்னும் நடிகையை மணந்தார். இவர் பாக்யராஜின் “இன்று போய் நாளை வா”, “மௌன கீதங்கள்”, “பாமா ருக்மணி” ஆகிய சில படங்களிலும் நடித்தவர். சில வருட மண வாழ்க்கைக்குப் பிறகு, நோய்வாய்ப்பட்டு பிரவீணா இறந்தார். சில காலத்திற்குப் பின்னர், பாக்யராஜ் அப்போது முன்னணி நாயகியரில் ஒருவராக இருந்த பூர்ணிமா ஜெயராமை மணந்தார். இவர்களுக்கு, சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற மகனும் உண்டு.

இவர்கள் இருவரையுமே பாக்யராஜ் திரையுலகில் அறிமுகம்  செய்திருக்கிறார். சரண்யா முதல் படத்திற்குப் பிறகு நடிக்கவில்லை.  சாந்தனு தன் முதல் படமான சக்கரக்கட்டி என்னும் படத்தில் நாயகனாக அறிமுகமாகி தற்போது வரை நடித்து வருகிறார். மேலும் இவர் இயக்குனர் மட்டுமல்லாமல் நடிகர் ,திரைக்கதை ஆசிரியர் ,இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார் . இவர் பல மொழி படங்களிலும் பணியாற்றியுள்ளார் . இப்படி பாக்யராஜ் பிரபலமாவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் தான் நடிகை பிரவீணா . அந்த வகையில் பாக்யராஜ் இயக்குனராக ஆவதற்கு முன் கஷ்டப்பட்டு வந்துள்ளார்.பின்னர் அவரை சந்தித்து சென்னை போகுமாறு பிரவீனா கூறியிருக்கிறார் . இதன் பிறகு தான் பாரதிராஜாவுடன் பணியாற்றும் வாய்ப்பு பாக்யராஜ் அமைந்தது .

இதையடுத்து நடிகை பிரவீணாவை கடந்த 1981-ஆம் ஆண்டு பாக்யராஜ் திருமணம் செய்து கொண்டார் . ஆனால் திருமணமான இரண்டு வருடங்களில் நடிகை பிரவீணா மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் . பின்னர் அவர் இறந்த ஒரு ஆண்டிலேயே நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார் பாக்யராஜ். திருமணமானவர்களுக்கு சாந்தனு என்ற மகனும் சரண்யா என்ற மகளும் உள்ளனர் . மேலும் நடிகை பிரவீணாவை இதுவரை மறக்காத பாக்யராஜ் அவர் ஆசையாக கொடுத்த மோதிரத்தை பத்திரமாக வைத்து இருக்கிறாராம். அதுமட்டுமல்லாமல் அவரின் நினைவாக அவரின் புகைப்படத்தை அவரின் அலுவலகத்தில் பாக்யராஜ் வைத்திருக்கிறாராம் . இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…

Leave A Reply

Your email address will not be published.