நடி கை டிஸ் கோ சாந்தி யி ன் வாழ்க் கை யில் இத் த னை சோக ங்க ளா . .. ??? க ண் முன் னே பறி ப் போன இரண் டு உயி ர்க ள். ..!! ! இவ ருக் கு இப்படி யொ ரு நிலை மை யா .. .? ?? என்ன வென் று நீங் க ளே பாரு ங் க …!! !

0

80 களின் காலகட்டங்களில் ரசிகர்களை தன்னுடைய கவர்ச்சியால் கவர்ந்திழுத்தவர் தான் நடிகை டிஸ்கோ சாந்தி. அப்போது இவரின் கவர்ச்சி நடனத்திற்கு மயங்காத ஆட்களே இருக்க மாட்டார்கள் . அந்த அளவிற்கு தமிழ் ,தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் கலக்கிக் கொண்டிருந்தார் நடிகை டிஸ்கோ சாந்தி . குறிப்பாக ஊமைவிழிகள் படத்தில் ராத்திரி நேரத்து பூஜையில் என்ற பாடலில் நடனமாடி ரசிகர்களிடையே பெரிதும் பிரபலமானார் . இதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது . கடைசியாக இவர் 1996 ஆம் ஆண்டு வெளியான துரைமுகம் என்ற படத்தில் நடித்திருந்தார் . மேலும் அதே ஆண்டு நடிகர் ஸ்ரீஹரி என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை டிஸ்கோ சாந்தி. திருமணமான இவர்களுக்கு 2 மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர் . டிஸ்கோ சாந்தியின் கணவர் ஸ்ரீஹரி தமிழ் ,தெலுங்கு ,இந்தி உள்ளிட்ட மொழிகளில் வில்லனாகவும் ,குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார் .

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை டிஸ்கோ சாந்தி கூறியதாவது, திருமணமான எங்களின் வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக தான் போய்க் கொண்டிருந்தது. அப்போது என்னுடைய பெண் குழந்தை பிறந்து 4 மாதம் இருந்த போது உடல்நலக்குறைவால் இறந்துவிட்டாள். அவளின் திடீர் இறப்பை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை . பின்னர் சில ஆண்டுகளிலேயே மற்றொரு சோகம் . அது கடந்த 2013 ஆம் ஆண்டு என்னுடைய கணவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு இறந்தது தான் . அதுமட்டுமல்லாமல் என்னுடைய கணவரின் மரணத்திற்கு தவறாக கொடுத்த சிகிச்சை தான் காரணம்.

அப்படி மருத்துவர்கள் போட்ட ஊசியால் மூக்கு , வாயெல்லாம் ரத்த வாந்தி எடுத்தார் என்னுடைய கணவர் . இதனால் மாரடைப்பு ஏற்பட்டு என்னுடைய கணவர் அநியாயமாக உயிரிழந்துவிட்டார் என்று கூறினார் நடிகை டிஸ்கோ சாந்தி. அப்போது தவறுதலாக நடந்து விட்டது , எங்களை மன்னித்துவிடுங்கள் என்று அதற்கு தேவையான பணம் நாங்கள் தருகிறோம் என்று மருத்துவர்கள் கூறியது என்னால் இதுவரை மறக்கவே முடியவில்லை என்றும் , தற்போது என்னுடைய கணவர் நடத்தி வந்த அறக்கட்டளையை தன்னுடைய மகன்கள் உதவியுடன் நடத்தி வருவதாக நடிகை டிஸ்கோ சாந்தி அந்த பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது…

Leave A Reply

Your email address will not be published.