ஒ ரே ஒ ரு வீடி யோ வி ல் சி க் கி க் கொ ண் ட சூ ர் யா .. . ! !! இ ப் ப டி இ வ ங் ககி ட் ட வ ந்து மா ட் டி க் கி ட்டி ங் க ளே சா ர் . .. ? ? ? வீ டி யோ வை பா ர்த் து ஷா க் கான ர சி க ர் கள் . . .! ! !

0

கமல்ஹாசன் நடிப்பில் வரும் ஜூன் 3ஆம் தேதி ரிலீசாக இருக்கும் திரைப்படம் விக்ரம்.கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது, அதிலும் குறிப்பாக கமல் எழுதி, பாடிய பாடல் ஒன்று நேற்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, பாடலின் வரிகள் தற்போது பேசுபொருளாகி உள்ளது. தற்போது இப்படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது, அதாவது இப்படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 2010ம் ஆண்டு கமல், மாதவன் மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான மன்மதன் அம்பு படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த நிலையில், மீண்டும் கமல் படத்தில் நடிக்கிறார். முன்னர் வெளியான தகவல்களின்படி, விக்ரம் படத்தில் அமிதாப் பச்சன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்று கூறப்பட்டது. 37 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் கமலுடன் அமிதாப் பச்சன் இணைந்து நடிக்கவிருக்கிறார் என்றும், படத்தின் க்ளைமேக்ஸில் இவரது காட்சி இடம்பெற்று இருக்கும் என்று தகவல்கள் வெளியானது.

1986-ல் கமல் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ படத்தின் தொடர்ச்சியாக இப்படம் இருக்கும் என்றும், இந்த படத்தில் கமலை முப்பது வயது நபராக மாற்றும் தொழில்நுட்பத்திற்கு படக்குழு பத்து கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் பஹத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, ஷிவானி நாராயணன், மஹேஸ்வரி, நந்தினி போன்ற பலர் நடித்துள்ளனர். ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மரிக் மீடியா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஜூன்-3ம் தேதி ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

மேலும் சூர்யா அவன் இவன் படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருப்பார். இந்த படத்தை கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் இயக்கியுள்ளார். மாநகரம், கைதி, மாஸ்டர் என தோல்வி கண்டிராத இயக்குனர் என்பதால் இந்த படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த படத்தின் நடிகர்கள் லிஸ்ட்டே ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமாவையே பிரமிக்க வைத்தது.உலகநாயகன் கமல்ஹாசன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் , நரேன், காளிதாஸ் ஜெயராம் என பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் சூர்யா, கார்த்தி இருவரில் யாரோ ஒருவர் கெஸ்ட் கதாபாத்திரத்தில் நடிக்கிறன்றனர்.

இல்லையென்றால் இதில் இவர்கள் இருவருமே நடிக்கின்றனர் என கூறப்பட்டு வந்தது.  இந்நிலையில், அதில் யார் நடிக்கிறார் என்பது தற்போது விடியோவாகவே வெளியாகியுள்ளாது. அதாவது, வெளியான வீடியோவில், ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல்ஹாசன் மற்றும் சூர்யா இருப்பது போலவும், அதில் கமலை கட்டிபிடித்துவிட்டு சூர்யா செல்வது போல இருந்தது. இதன் மூலம் விக்ரம் படத்தின் இறுதிக்காட்சியில் சூர்யா தோன்றுவார் என கூறப்படுகிறது. மேலும் சிலர் இந்த வீடியவை பார்த்த சிலர் விக்ரம் இரண்டாம் பாகத்திற்க்கு சூர்யா தான் லீடு கொடுக்க தோன்ற போகிறார் என கூறி வருகின்றனர். எல்லாம் படம் ரிலீஸ் ஆனால் தான் தெரியவரும்.

Leave A Reply

Your email address will not be published.