வி ஜ ய், சிவ கா ர் த்தி கேய னு க்கு சரி வ ரா த ஒ ன் று , வடி வே லு க்கு மட் டும் ச ரி வரு மா . ..? ? ? மி கப் பெ ரிய ரி ஸ்க் எடு க்கு ம் வ டி வேலு .. .!! ! இ ணை ய த்தி ல் வை ர லாகு ம் தக வ லை க ண் டு அ தி ர் ச்சி யான ரசி க ர் க ள் .. .! !!

0

தமிழ் ரசிகர்களை தன்னுடைய யதார்த்தமான காமெடி காட்சிகள் மூலம் கவர்ந்தவர் தான் வைகைப்புயல் வடிவேலு அவர்கள் . இதனால் இவருக்கு சிறியவர் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்ட ரசிகர்கள் இருந்து வருகின்றனர் . மேலும் ஆரம்பத்தில் காமெடியனாக நடித்து வந்த நடிகர் வடிவேலு 23ஆம் புலிகேசி, இந்திரலோகத்தில் நான் அழகப்பன் ,தெனாலிராமன் ,எலி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். இதனிடையே இயக்குனர் ஷங்கருக்கும் இவருக்கும் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஒரு சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்து வந்தார். இதையடுத்து தற்போது இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார் வடிவேலு . இந்த படத்தில் வடிவேலுடன் இணைந்து பிக்பாஸ் ஷிவானி, ரெட்டின் கிங்ஸ்லி, சிவாங்கி போன்ற பல பிரபலங்கள் நடிக்க உள்ளனர். மேலும் தமிழ் சினிமாவை பொருத்தவரை பெரும்பாலும் படங்களில் 4 அல்லது 5 பாடல்கள் இருக்கும் . ஆனால் தற்போது வரும் படங்களில் நேரம் காரணமாக அதிகம் பாடல் இடம் பெறுவதில்லை. அப்படியும் மீறி ஒரு பாடல் வந்தால், அதை படத்தின் இறுதியில் போட்டு விடுகின்றனர் .

அந்த வகையில் சமீபத்தில் வெளியான விஜய்யின் பீஸ்ட் படம் மற்றும் சிவகார்த்திகேயன் டாக்டர் படம் போன்றவற்றில் கடைசியாக பாடல் இடம் பெற்று இருந்தது. இது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிருப்தியை தந்தது . இதையடுத்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலுவுடன், ஷிவானி ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளாராம். நடிகர் வடிவேலு இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக எடுக்கப்படும் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக்கில் நாய்களுடன் வடிவேலு செம்ம கெத்தாக அமர்ந்திருக்கிறார்.

ஏற்கனவே, சதிஷ் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு ‘நாய் சேகர்’ என்று தலைப்பிட்டுள்ளதால் ‘ நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்று வடிவேலு படத்திற்கு  தலைப்பிட்டுள்ளார்கள். முன்னதாக, சிம்புதேவன் வடிவேலு கூட்டணியில் வெளியான இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி திரைப்படம் வசூல் ரீதியில் பெரும் வெற்றியடைந்தது. மேலும் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வெளியான அந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து 10 ஆண்டுகள் கழித்து இம்சை அரசன் படத்தின் இரண்டாம் பாகத்தை, இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்ற தலைப்பில் உருவாக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அந்தப் படத்தை இயக்குனர் ஷங்கர், லைகா நிறுவத்திற்கு முதல் பிரதி

அடிப்படையில் தயாரித்து கொடுப்பதாக ஒப்பந்தம் கையெழுத்தானது. அதையடுத்து இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால் சில நாட்களிலேயே நடிகர் வடிவேலுக்கு படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படப்பிடிப்பிற்கு அவர் செல்லவில்லை. இதனால் பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்ட அரங்கால் தயாரிப்பாளர் ஷங்கருக்கு நஷ்டம் ஏற்பட்டது.தற்போது இந்த படத்தின் நேரம் காரணமாக அந்தப் பாடலை படத்தின் முடிவில் தான் போடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் விஜய், சிவகார்த்திகேயனுக்கு சரி வராத ஒன்று வடிவேலுக்கு மட்டும் சரி வருமா என்று கேட்டு வருகின்றனர்…

Leave A Reply

Your email address will not be published.