த னது குடும் பத் துடன் இரு க் கும் இந் த சிறு வன் யா ரெ ன்று தெரி கிற தா …??? அட , தமி ழ் சினி மாவி ன் முக் கிய இயக் குன ரா …??? வெளி யா ன புகை ப்படத் தை பார் த்து வி ய ந்து போ ன ரசி கர் க ள் …!!!

0

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் . கௌதம் வாசுதேவ் மேனன் , பிறப்பு: 25 பெப்ரவரி 1973 என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர், கதாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். தனது தமிழ்ப் படங்களின் மறு ஆக்கங்களாக தெலுங்கு மற்றும் இந்திப் படங்களையும் இயக்கியுள்ளார். இவரது பெரும்பாலான திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றுள்ளன. இவர் தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் இயக்குனர் ராஜீவ் மேனன் அவர்களிடம் உதவி இயக்குனராக மின்சார கனவு என்ற படத்தில் பணியாற்றி வந்தார் . பின்னர் கடந்த 2001ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான மின்னலே என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.முக்கியமாக காதல் திரைப்படங்களான மின்னலே , வாரணம் ஆயிரம் ,விண்ணைத்தாண்டி வருவாயா , மற்றும் த்ரில்லர்களான காக்க காக்க , வேட்டையாடு விளையாடு , மற்றும் என்னை அறிந்தால் . இதில் வாரணம் ஆயிரம் திரைப்படமானது சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது. கௌதம் தனது ஃபோட்டான் கதாஸ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார்.

இவரது தயாரிப்பான தங்க மீன்கள் திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளது. இப்படி வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது . பின்னர் இதை தொடர்ந்து காக்க காக்க, வேட்டையாடு விளையாடு ,பச்சைக்கிளி முத்துச்சரம் ,வாரணம் ஆயிரம் ,விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமானார் . இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் பெரும்பாலும் தன்னுடைய படங்களில் தனித்துவமான காதல் மற்றும் ஆக்சன் காட்சிகளை வைத்து பிரபலமானார் என்று கூட கூறலாம் . இவர் இயக்குனர் மட்டுமல்லாமல் நடிகர் தயாரிப்பாளர் மற்றும் பின்னணிக் குரல் கொடுப்பவர் ஆவார்.பிரீத்தி மேனன் என்பவரை கௌதம் மணந்து கொண்டார்.

இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். ஆடை வடிவமைப்பாளர் உத்தரா மேனன் இவரது தங்கை ஆவார். என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு பிறகு கௌதமின் படங்களில் பணியாற்றியுள்ளார். மேலும் சமீபத்தில் வெளியான ருத்ர தாண்டவம் , எப் ஐஆர் , செல்பி போன்ற பல படங்களில் வில்லனாகவும் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் .இதையடுத்து தற்போது நடிகர் சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் . இப்படியொரு நிலையில் இயக்குனர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் தனது குடும்பத்துடன் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இருந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதோ அந்த குடும்ப புகைப்படம் நீங்களும் பாருங்க…

 

 

Leave A Reply

Your email address will not be published.