சற் று மு ன் கே ஜி எப் பட த்தி ன் முக் கிய நடி கர் தி டீர் மர ண ம் .. .!! ! அதிர்ச் சியி ல் உ றை ந்து போ ன திரை ப்பி ரபல ங்க ள்.. . !! ! பெ ரும் சோக த் தில் ர சி கர் க ள் . ..! !!

0

கன்னட நடிகர் மோகன் ஜுனேஜா இன்று காலை காலமானார். 54 வயதாகும் மோகன் ஜுனேஜா சமீபத்தில் வெளியாகி உலக அளவில் வசூல் சாதனை படைத்து வரும் கேஜிஎஃப் சாப்டர் 2 படத்தில் கடைசியாக நடித்திருந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர் பிரசாந்த் நில் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கே ஜி எப் . எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது . இதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இதையடுத்து சமீபத்தில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது . மேலும் இந்த படத்தில் யாஷுடன் இணைந்து சஞ்சய் தத் ,ரவீனா டண்டன் ,பிரகாஷ்ராஜ் ,ஸ்ரீநிதி செட்டி போன்ற பல நடிகர் , நடிகைகள் நடித்திருந்தனர் . குறிப்பாக இந்த படம் வெளியாகி ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது கேஜிஎப் 2 திரைப்படம் .கே ஜி எஃப் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் நடித்தவர் தான் நடிகர் மோகன் ஜுனேஜா.

இந்த படத்தில் இவர் பேசிய வசனங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெரிதும் பிரபலமானது . இவர் கன்னட சினிமாவில் பெரும்பாலும் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் . செல்லடா என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து , கர்நாடக மாநிலம் தும்குரை சேர்ந்த மோகன், 2008 ம் ஆண்டு சங்கமா என்ற கன்னட படத்தின் மூலம் நடிகராக சினிமாவில் அறிமுகமானார். 54 வயதாகும் மோகன் இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 100 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இவர் பெரும்பாலும் வில்லன் மற்றும் காமெடி ரோல்களிலேயே நடித்துள்ளார். கன்னடத்தில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த மோகன், கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்திருந்தார்.

ராக்கி பாய் பற்றியும், கேஜிஎஃப் பற்றியும் பத்திரிக்கையாளரிடம் விளக்கமாக கூறும் ஏரியாவாசியாக நடித்திருந்தார். இவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. படங்கள் மட்டுமின்றி பல டிவி சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார். நீண்ட காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த மோகன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சைக்கு அவரது உடல்நிலை ஒத்துழைக்காததால் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதனால் கடந்த சில நாட்களாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மோகன், இன்று காலை உயிரிழந்தார். மோகன் ஜுனேஜா கல்லீரல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதற்காக பல காலமாக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

கன்னடம் மற்றும் தமிழில் தயாரிக்கப்பட்ட டாக்சி டிரைவர் நம்பர் 1 என்ற படத்தில் மோகன் ஜுனேஜா நடித்திருந்தார். படங்களில் நடித்ததுடன் சீரியல்கள் மற்றும் படங்களுக்கு வசனமும் எழுதி உள்ளார் மோகன் ஜுனேஜா.   இவருடைய திடீர் இழப்பு ரசிகர்கள் மற்றும் கன்னட திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இவரின் திடீர் இற ப்பிற்கு பிரபலங்களும் , ரசிகர்களும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்…மோகன் ஜுனேஜாவின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறுவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவரின் மறைவிற்கு கன்னட திரையலகை சேர்ந்த பலரும் சோஷியல் மீடியாக்களில் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.ரசிகர்கள் பலரும் தங்களின் வேதனையை சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.