500க் கும் மே ற் ப ட் ட ப ட ங் க ளி ல் நடி த் த ந டி க ர் கு ள் ள ம ணி . . . ! ! ! த னக் கெ ன் று எ ந் த ஓ ர் அ ங் கீ கா ர மு ம் இ ல் லா ம ல் க டை சி வ ரை ப ஸ் சி ல் போ ன கா மெ டி ந டி க ரி ன் ப ரி தா ப மா ன வா ழ் க் கை. . . ! ! ! அ னா தை யா க இற ந் து கி ட ந் த நடி க ர் இ தை கே ட் டு க ண் ணீ ர் வி ட் ட ர சிக ர் க ள் . . . !! !

0

நகைச்சுவை நடிகர் குள்ளமணி 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் யாருக்குமே தெரியாமல் அனாதையாக இறந்து போனார்.குள்ளமணி 1952ல் புதுக்கோட்டை மாவட்டத்தில் மாரமடை என்ற ஊரில் பிறந்தவர். குள்ளமாக இருந்தாலும் அதையே பிளஸ் பாயிண்டாக்கி சினிமாவில் சாதித்துக் காட்டியவர் தான் குள்ளமணி. சினிமாவில் நுழைய வேண்டும் என்ற ஆர்வத்தில் சிறுவயது முதலே பல நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதிலும் எம்ஜிஆர், சிவாஜிகணேசன், நாகேஷ் என பல பிரபலங்களுடன் மேடை நாடகங்களில் நடித்துள்ளார். அதனால் இவருக்கு திரைப்படத்துறையில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. கமல், ரஜினி, பாக்யராஜ், ராமராஜன், பாண்டியராஜன் என எல்லா நடிகர்களுடனும் சேர்ந்து நடித்துள்ளார். 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அசர வைத்துள்ளார். இவரது கேரக்டர் நல்லா தெரியுமாறு உள்ளவை 30 அல்லது 40 படங்களாகத்தான் இருக்கும். அதிலும் ரொம்பவும் குறிப்பாக இவர் செய்த கதாபாத்திரங்களில் ஒருசிலவற்றை இப்போது பார்த்தாலும் இவரா இப்படிப் பண்ணினது என்று ஆச்சரியம் மேலோங்கும்.

குறிப்பாக இவர் கரகாட்டக்கரானில் பழைய இரும்பு, தகர சாமான்களுக்கு பேரீச்சம்பழம் என்று வியாபாரம் செய்ய தள்ளுவண்டியில் வருகையில் செம ஜோராக இருக்கும். கவுண்டமணி திட்டும்போது அண்ணே நான் வியாபாரிண்ணேன் என்று அவர் சொல்லும் போது யாராலும் சிரிக்காமல் இருக்க முடியாது. அதேபோல் அபூர்வசகோதரர்கள் படத்தில் கமலின் நண்பராக வருவார். பணக்காரன், மைடியர் மார்த்தாண்டன், ஆடிவெள்ளி போன்ற படங்கள் அவரது கேரியரில் முக்கியமானவை. மாயா, வாய்மையே வெல்லும், லூட்டி, உள்ளம் கொள்ளை போகுதே, நாள் நட்சத்திரம், தோரணை போன்ற படங்கள் லேட்டஸ்டாக இவர் நடித்தவை. கடைசியாக நடித்த படம் எதுவென்றால் 2013ல் வெளியான சந்தித்ததும் சிந்தித்ததும்.

இவருக்கென்று ஒரு அங்கீகாரம் இல்லை. கடைசி வரை பஸ்ஸில் தான் போவாராம். பஸ்சுக்கு காசு இல்லாத போது நடந்தே தான் கோடம்பாக்கம் போவாராம். டிச.25, 2013ல் இறந்தார். இவர் இறந்து போவதற்கு ஒரு மாசம் முன்பு வரை சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டு, போதிய மருத்துவ வசதிகள் கிடைக்கல. இவர் இறந்து போன செய்தி திரைத்துறையினருக்குத் தெரியக்கூட இல்லை. இவரது இறுதிச்சடங்குக்கு ஒருவர் கூட வரவில்லை. இவரது இறுதி மரியாதை உடல் புதுக்கோட்டையில் அவரது சொந்த ஊரான மரமடையில்நடைபெற்றது. பரிதாபமான நிலையில் இறந்து போன நட்சத்திரங்கள் ஏராளமானோர் இருந்தாலும் இவரது இறப்பு சொல்லொண்ணாதது தான்.

Leave A Reply

Your email address will not be published.