பி ரப ல ந டி க ர் வி க் ர மி ன் மு ழு சொ த் து மதி ப் பு எ வ் வ ள வு தெ ரி யு மா . . . ? ?? அ டேங் க ப்பா . . ! எ ன் ன து , இ த்தனை கோ டி யா எ ன் று வா ய் ய டை த் து போ ன ர சி க ர் க ள் . . . ! !!

0

தமிழ் திரையுலகில் தனது மாறுபட்ட நடிப்பின் மூலம் தனக்கென்று தனி இடத்தை பிடித்து வைத்திருப்பவர் விக்ரம்.விக்ரம் 17 ஏப்ரல் 1966 என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் மற்றும் குரல் நடிகர் ஆவார். இவர் 1990 ஆம் ஆண்டு முதல் சேது 1999 , விண்ணுக்கும் மண்ணுக்கும் 2001, சாமி 2003, பிதாமகன் 2003 ஐ 2015 போன்ற தமிழ் மொழி திரைப்படங்களிலும், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இவர் தமிழ்த் திரைப்படத் துறையில் பணி புரிந்த வரையில் 7 பிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார். அது மட்டுமின்றி சிறந்த நடிகருக்கான ஒரு தேசிய விருதும் தமிழ் நாடு மாநில விருதும் பெற்றுள்ளார். இவருக்கு மிலான் பல்கலைக்கழகம் 2011 ஆம் ஆண்டு மே மாதம் அன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. தனது நடிப்பாற்றல் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் முன்னணி இடம் வகிக்கும் நடிகருள் இவரும் ஒருவர். விக்ரம் வெவ்வேறு சமூக நிகழ்ச்சிகளை முன் நின்று நடத்தியுள்ளார். இவர் ஐக்கிய நாடுகளின் குடிசார் அமைப்பின் தூதர். சஞ்சீவனி அறக்கட்டளையின் தூதுவராகவும் வித்யா சுதா, என்னும் மாற்றுத் திறன் பள்ளியின் தூதுவராகவும் உள்ளார்.

காசி கண் நலப்பணியின் வேளையிலும் தன்னை ஆட்படுத்திக் கொண்டார். விக்ரம் நிறுவனம் மூலம் பல நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.விக்ரம், ஜான் விக்டருக்கும் ராஜேஸ்வரிக்கும் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில், 17ம் ஏப்ரல் 1965 அன்று நடுத்தர குடும்பமொன்றில் பிறந்தார். இவரது இயற்பெயர் கென்னெடி ஆகும். இவரது தந்தை வினோத் ராஜ் என்றழைக்கப்படும் ஆவார். அவர் தந்தை ஒரு முன்னாள் இந்திய ராணுவ வீரர். தற்போது திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார். இவரது தாய் இராஜேசுவரி துணை ஆட்சியராய்ப் பணியாற்றியவர். விக்ரமுக்கு அனிதா என்கிற தங்கையும் அர்விந்த் என்கிற தம்பியும் உள்ளனர். விக்ரம் ஏற்காட்டிலுள்ள மாண்டபோர்ட் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பைத் தொடங்கினார்.

பள்ளிப் பருவத்திலேயே கராத்தே கலையோடு நீச்சல் விளையாட்டையும் கற்றுத் தேர்ந்தார். திரைப் படங்களில் நடிக்கும் ஆர்வமிருந்தும் இவரது தந்தையாரின் கட்டாயத்தால் முதுகலை வணிக மேலாண்மை படிப்பை இலயோலாக் கல்லூரியில் படித்து முடித்தார். இவர் கல்லூரியில் படிக்கும்போது பெரு வாகனம் மோதியதால் மிகுந்த காயமடைந்ந்தார். மூன்று வருடம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார், தன் கால் செயலிழக்காமலிருக்க இருபத்து மூன்று அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டார். இவர் 1992 ஆம் ஆண்டு சைலஜா பாலகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு துருவ் விக்ரம் என்ற ஒரு மகனும் அக்ஷிதா விக்ரம் என்ற ஒரு மகளும் உண்டு.

இவரின் மகன் துருவ் விக்ரம் தற்பொழுது திரைப்படங்க்ளில் நடித்து வருகின்றார். இவருடைய நடிப்பில் சமீபத்தில் நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்த திரைப்படம் மஹான். இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. ஆனால், படத்தில் நடித்திருந்த நடிகர்களின் நடிப்பு வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் கோப்ரா திரைப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் நடிகர் விக்ரமின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 150 கோடி இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை. ஆனால், பெரிதும் திரை வட்டாரங்களில் கூறப்படுவது இவை தான்.

Leave A Reply

Your email address will not be published.