16 வ யதி ல் ந டி க் க வ ந் த நடி கை யை ஏ மா ற் றி க ம ல் செ ய் த வே லை . . .! ! ! இ த னா ல் க ண்ணீ ர் வி ட் டு கத றி ய ந டி கை . . .! ! ! பல வ ருட ங் க ள் க ழி த் து உ ண் மை யை உ டை த் த ந டி கை . . . ! ! ! ந ட ந் த து எ ன் ன னு தெ ரி ச் ச நி ங் க ளே ஷா க் க யி டு வி ங் க . . . ! ! !

0

தமிழ் சினிமா உலகில் உலகநாயகன் என்ற அங்கீகாரத்தோடு வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன் அவர்கள். இவர் தன்னுடைய படங்களின் மூலம் பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியவர். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய நேர்த்தியான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் என்று கூட சொல்லலாம் . அப்படி இவரின் மாறுபட்ட நடிப்பில் பல திரைப்படங்கள் வெளியாகி இருந்தது . அந்த வகையில் ஒரு திரைப்படம் தான் புன்னகை மன்னன் .புன்னகை மன்னன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தக்காட்சி குறித்து அப்போது தனக்கு எதுவுமே தெரியாது என்றும், தன்னிடம் எதுவுமே கூறாமல் அந்தக்காட்சி படமாக்கப்பட்டதாகவும் நடிகை ரேகா தெரிவித்துள்ளார். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன், ரேகா நடித்த திரைப்படம் ‘புன்னகை மன்னன்’. 1986-ம் ஆண்டு வெளியான அந்த திரைப்படத்தின் முத்தக்காட்சி குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது. 2019-ம் ஆண்டு நடிகை ரேகா கொடுத்த நேர்காணலில் ‘புன்னகை மன்னன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தக்காட்சி குறித்து பேசினார். அந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் புன்னகை மன்னன் திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தக்காட்சி குறித்து

அப்போது தனக்கு எதுவுமே தெரியாது என்றும், தன்னிடம் எதுவுமே கூறாமல் அந்தக்காட்சி படமாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். அந்த நேர்காணல் வீடியோ தற்போது வைரலாகியுள்ள நிலையில் அது குறித்து ‘நியூஸ் மினிட்’க்கு ரேகா விளக்கம் அளித்துள்ளார். புன்னகை மன்னன் படப்பிடிப்பு தளத்தில் என்ன நடந்தது என்றும் அவர் கூறியுள்ளார். அதில், ”இது குறித்து நான் 100 முறை சொல்லிவிட்டேன். அந்த முத்தக்காட்சி என்னிடம் சொல்லாமலே எடுக்கப்பட்ட காட்சி. மக்கள் திரும்ப திரும்ப இதையே கேட்கிறார்கள். இதற்கு பதிலளித்தே நான் சோர்வாகிவிட்டேன். அந்த முத்தம் ஆபாசமாக இருக்காது.  காட்சிக்கு அது தேவையான ஒன்றாக இருக்கும். ஆனால் அந்தக்காட்சி எடுக்கப்பட்டபோது நான் சிறுமி.

அதைப்பற்றி எல்லாம் எனக்கு தெரியாது. காட்சி படமாக்கப்படும்போது நான் சொன்னது நினைவிருக்கிறதா? என்று கமலிடம் கே.பாலச்சந்தர் கேட்டார். அப்போது நான் கண்களை மூடிக்கொண்டு இருந்தேன். காட்சியின்படி 1,2 என்று கமல் எண்ணுவார். அப்போது திடீரென்று அவர் என்னை முத்தமிட்டார். அந்தக்காட்சியை தியேட்டரில் பார்க்கும்போது தான் அது எவ்வளவுபெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என தெரிந்துகொண்டேன். இது நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டாலும் அது தொடர்பான கேள்வி என்னை துரத்திக்கொண்டே இருக்கிறது. எனக்கு தெரியாமலே அந்தக்காட்சி எடுக்கப்பட்டது என்பதை மக்கள் நம்ப மறுக்கிறார்கள்.

இது தொடர்பாக யாரும் மன்னிப்பு கேட்க வேண்டுமென நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அந்தக்காட்சிக்கு அனுமதி கேட்டிருந்தால் நான் ஒப்புக் கொண்டிருக்கமாட்டேன். அது அவசரமாக எடுக்கப்பட்ட காட்சி. அது முடிந்துவிட்டது. அதை திரும்பிப் பார்க்க நான் விரும்பவில்லை. ஆனால் அந்தக் காட்சிக்கு பின் இனிமேல் கவனமாக இருக்க வேண்டுமென்று கற்றுக்கொண்டேன்” என தெரிவித்தார். தற்போது வீடியோ வைரலாகி வரும் நிலையில் இயக்குநர் கே.பாலச்சந்தரும், கமல்ஹாசனும் செய்தது தவறு என பலரும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். படக்காட்சிக்கு தேவை என்றாலும் காட்சியில் தொடர்புடைய நாயகியிடம் அனுமதி பெறாமல்

அவருக்கு முத்தமிடுவது எந்த விதத்திலும் நியாயமில்லை என கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த 1986 ம் ஆண்டு இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் கமலுடன் இணைந்து ரேவதி, ஸ்ரீவித்யா ,ரேகா போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர் . இந்தத் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் தான் நடிகை ரேகா . கடலோர கவிதைகள் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் இரண்டாவதாக இந்த படத்தில் நடித்திருந்தார்.  மேலும் இந்த படத்தில் நடிக்கும் போது நடிகை ரேகாவுக்கு வெறும் 16 வயது தானாம். இதையடுத்து இந்த படத்தின் இறுதிக்காட்சியில் தற்கொலை செய்து கொள்ளும் காட்சி ஒன்று வரும் . அந்த காட்சியில் கமலும், ரேகாவும் ஒருவருக்கு ஒருவர் மாறி பேசிக்கொள்வார்கள் .

அப்போது ஒரு முத்தக் காட்சி ஒன்று இருப்பதை ரேகாவிடம் கூறாமலேயே எடுத்துள்ளனர் படக்குழு. அந்த வகையில் கமல் மற்றும் ரேகா தற்கொலை செய்வதற்கு முன் பேசிக்கொள்வார்கள் . அப்போது திடீரென கமல் ரேகாவை இறுக்கி அணைத்தபடி உதட்டில் முத்தம் கொடுத்து விடுவார் . அப்போது ரொம்ப நேரம் ஆகியும் கூட முத்தம் கொடுப்பதை நிறுத்த வில்லையாம் கமல் . இதனால் ரேகா , என்னிடம் இப்படி ஒரு காட்சி இருப்பதையே கூறாமல் எடுத்து விட்டீர்களே என்று படப்பிடிப்பு முடிந்ததும் அழுது கொண்டே இருந்தாராம். இது எங்கள் வீட்டுக்கு தெரிந்தால் என்னை என்ன நினைப்பார்கள் என்று கூறி அழுததாக அவரே ஒரு பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது…

Leave A Reply

Your email address will not be published.