எ ன்ன து , மை னா ந ந் தினி யின் க ண வர் இ ந்த பிர பல ந டி கரி ன் வா ரி சா. ..? ?? கா ட்டு த் தீ யா ய் ப ர வும் த க வ லை க ண் டு ஷா க்கா ன ர சிக ர் கள் . ..! ! !

0

பிரபல தொலைக்காட்சியில் சென்சேஷனலான நிகழ்ச்சியாக இப்போது Mr & Mrs சின்னத்திரை 3வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.இந்த நிகழ்ச்சியின் இந்த எபிசோடை மா.கா.பா ஆனந்த் மற்றும் ‘பிக்பாஸ்’ அர்ச்சனா தொகுத்து வழங்கினார்.இதில் பாடகர்கள், குக் வித் கோ மாளி பிரபலங்கள், சீரியல் நடிகர்கள் என பல்வேறு விஜய் டிவி பிரபலங்களும் கணவன் மனைவியாக கலந்துகொண்டனர்.குறிப்பாக தீபா அக்கா, சீரியல் நடிகை மைனா நந்தினி மற்றும் அவருடைய கணவர் யோகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் நடிகர் யோகி தமது மனைவி மைனாவிடம் புரோபோஸ் செய்த நெகிழ்ச்சியான காட்சி அரங்கேறியது. அப்போது இந்த நிகழ்ச்சியின் சிறப்பு நடுவர்களாக கோபிநாத் மற்றும் தேவதர்ஷினி அமர்ந்திருந்தனர்.மைனா நந்தினி என்று கூறினாலே ஒருவரின் முகம் நியாபகம் வந்துவிடும். சரவணன்-மீனாட்சி என்கிற சீரியலில் மைனா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானதால்

அனைவரும் அவரை மைனா நந்தினி என அழைக்க ஆரம்பித்தார்கள். அவர் யோகேஷ் என்ற சீரியல் நடிகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் அண்மையில் பிறந்தார். மைனா நந்தினி குழந்தை பெற்ற பிறகும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவர் தனது கணவரோடு Mr Mrs சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியின் மூலம் மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் பிரபல நடிகரின் பேரன் என்பது தெரிய வந்துள்ளது.சிவாஜி ஆகியோருடன் எல்லாம் நடித்த பழம்பெறும் நடிகர் ராமதாஸ் அவர்களின் பேரன் தான் யோகி என்பது மக்களுக்கு இந்நிகழ்ச்சி மூலம் தெரிகிறது.

அதில் கோபிநாத் கூறும்போது சிவாஜி கணேசனுடன் படங்களிலும் தெலுங்கு படங்களிலும் நடித்த பிரபல பழம் பெரும் நடிகர் ராமதாஸ் தான் யோகியின் (மைனாவின் கணவர்) தாத்தா என்பதை ரிவீல் செய்தார். அப்போது யோகி, “நான் என்னென்னவோ முயற்சி செய்தேன்.. திரைத்துறைக்கு வரும் யோசனையே இல்லை. ஆனால் அப்போதெல்லாம் என் தாத்தா திரைத் துறையைச் சார்ந்தவர் என்பது எனக்கு தோன்றவே இல்லை. இப்போது திரைத்துறையில் வளரும் இந்த வேளையில் தாத்தா உடன் இல்லை என தோன்றுகிறது!” என்று எமோஷனலாக குறிப்பிட்டிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.