சூ ப்ப ர் ஸ்டா ர் ரஜி னிகா ந்தி ன் மு ழு சொ த்து ம திப் பு எ வ்வள வு தெ ரியு மா.. .? ? ? அ டேங் கப் பா .. ! என் ன து ,இ த் த னை கோ டி யா.. .? ? ? இ தை கே ட் டு அ தி ர்ச் சிய டை த் த ர சிக ர் கள் . ..!!!

0

தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடத்திற்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் அடுத்ததாக தலைவர் 169 படத்தில் நடிக்கவுள்ளார் இப்படத்தை நெல்சன் தில்குமார் இயக்குகிறார்.நடிகர் ரஜினிகாந்த் 1950 ம் ஆண்டு டிசம்பர் 12 ம் தேதி கர்நாடகாவில் பிறந்தவர். இவரது இயற்பெயர் சிவாஜி ராவ் கேய்க்வாட். ரஜினியின் தாய்மொழி மராத்தி. ரஜினி 1975 ம் ஆண்டு சினிமாவில் நடிக்க வந்தார். கடந்த 46 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி ஆகிய மொழிகளில் 170 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். ஆனால் இதுவரை தனது தாய்மொழியான மராத்தியில் ரஜினி ஒரு படம் கூட நடித்ததில்லை. பஸ் கண்டக்டராக தனது வாழ்க்கையை துவக்கிய ரஜினிகாந்த், படிப்படியாக வளர்ந்து சூப்பர் ஸ்டார் அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார். கோடிக்கணக்கான ரசிகர்கள் அவரை தலைவர் என கொண்டாடி வருகின்றனர்.

ரஜினியின் சொத்து மதிப்பு, வருமானம் உள்ளிட்ட பலரும் அறியாத தகவல்களை இங்கே பார்க்கலாம். ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல்… .ரசிகர்கள் கொண்டாடும் ரஜினியின் டாப் 10 படங்கள் ரஜினி ஒரு படத்திற்கு ரூ.50 கோடி வரை சம்பளம் பெறுகிறார். எவரும் விளம்பரப்படுத்த தேவையில்லாத தனி பிராண்டாக உருவெடுத்திருப்பவர் ரஜினி. அதனால் இவரது படங்களுக்கோ, இவருக்கோ தனியாக விளம்பரம் செய்யப்படுவதில்லை. ரஜினியின் பெயருக்காகவே ஓடி சூப்பர் ஹிட்டாகி, வசூலை குவித்த படங்கள் ஏராளம். 2021 ம் ஆண்டு நிலவரப்படி ரஜினியின் மொத்த சொத்து மதிப்பு

இந்திய மதிப்பில் ரூ.365 கோடி. ரஜினி தான் நடத்தும் அறக்கட்டளை மற்றும் பலருக்கு உதவி செய்வதற்காக ஏராளமான தொகையை செலவிட்டு வருகிறார். இதுவரை சினிமா வட்டாரங்களில் கிடைத்த தகவலின்படி, தான் நடித்த ஏதாவது ஒரு படம் ஓடவில்லை என்றால், அந்த நஷ்டத்தை சரி செய்வதற்காக தான் வாங்கிய சம்பள பணத்தை தயாரிப்பு நிறுவனத்திடமே ரஜினி திரும்ப கொடுத்து விடுவாராம். நாட்டிலேயே அதிகமானவர்களால் கொண்டாடப்படும் நடிகர்களில் ரஜினிகாந்த்தும் ஒருவர். இவருக்கு சென்னை போயஸ் கார்டன் பகுதியில் ஒரு வீடு உள்ளது.

இந்த வீட்டை 2002 ம் ஆண்டு ரஜினி கட்டினார். இந்த வீட்டின் தற்போதைய மதிப்பு ரூ.35 முதல் 40 கோடி ஆகும். மற்ற நடிகர்களைப் போல் ரஜினியிடம் 10 கார்கள் கிடையாது. மூன்று சொகுசு கார்கள் மட்டுமே உள்ளது. இதை அவரது தேவைகளுக்காக மட்டுமே ரஜினி பயன்படுத்தி வருகிறார். Toyota Innova, Range Rover, Bentley ஆகிய மாடல் கார்களை ரஜினி வைத்துள்ளார். ரஜினிகாந்த் தற்போது சொத்து மதிப்புபடி ரூ.100 முதல் ரூ.120 கோடிகளை முதலீடு செய்துள்ளார். நடிப்பு மட்டுமின்றி திரைக்கதை, பின்னணி பாடுவது, திரைப்பட தயாரிப்பாளர் என்ற முறையிலும் ரஜினிக்கு வருமானம் வருகிறது.

ர  ஜினிக்கு மாதத்திற்கு ரூ.3 கோடி வரை வருமானம் வருவதாக கூறப்படுகிறது. சமீபகாலமாக முன்னணி நட்சத்திரங்களின் சொத்து மதிப்பு குறித்து தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. இந்நிலையில், தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு குறித்தும்  தெரியவந்துள்ளது. அதன்படி, ரஜினிகாந்தின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 410 கோடி இருக்கும் என்று தெரிவிக்கின்றனர். இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை. ஆனால், பெரிதும் திரை வட்டாரங்களில் கூறப்படுவது இவை தான்.

Leave A Reply

Your email address will not be published.