பிர ப ல பா ட கி யு ட ன் நெ ரு க் க ம் இ ரு க் கு ம் இ சை ய மை ப் பா ள ர் அ னி ரு த் . . . ! ! ! யா ர் அ ந் த பா ட கி தெ ரி யு மா . . . ? ? ? பு கை ப் ப ட த் தை பா ர் த் து ஷா க் கா ன ர சி க ர் க ள் . . . ! ! !

0

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். இவர் தற்போது அஜித், விஜய், கமல், ரஜினி என அணைத்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கும் இசையமைக்கிறார். அனிருத் இசையமைக்கும் அனைத்து படங்களிலும் ஜோனிடா காந்தி என்பவர் ஒரே ஒரு பாடலையாவது பாடுகிறார். டாக்டர் படத்தில் செல்லம்மா, வேலைக்காரன் படத்தில் இறைவா என அனிருத்தின் பல பாடல்களை பாடியுள்ளார். அதே போல் தற்போது மீண்டும் டான் திரைப்படத்தில் அனிருத்துடன் இணைந்து பாடல் ஒன்றை பாடியுள்ளார் ஜோனிடா. ராக்ஸ்டார் அனிருத்தின் காதல் செய்தி தான் இப்போ கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்கே.. சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான “செல்லம்மா” பாடலை பாடிய பாடகி ஜோனிடா காந்தி உடன் அனிருத் காதல் வலையில் சிக்கி உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர் என்றால் அது நம்ம ராக்ஸ்டார் அனிருத் தான். எந்த பாட்டு போட்டாலும், ஹிட்டு தான்.

மற்ற இசையமைப்பாளர்களுக்கு இலவசமாக பாடிக் கொடுத்தாலும் அந்த பாட்டு ஹிட்டு தான். சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான “செல்லம்மா” பாடலை பாடிய பிரபல பின்னணி பாடகி ஜோனிடா காந்தியை இசையமைப்பாளர் அனிருத் காதலித்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. அனிருத் இசையமைக்கும் படங்களில் ஜோனிடாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. 1989ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி டெல்லியில் பிறந்தவர் ஜோனிடா காந்தி. பின்னர், குடும்பத்துடன் கனடா நாட்டில் செட்டில் ஆன அவர், 17 வயதில் யூடியூப் சேனலை தொடங்கி தனது இசை ஆல்பத்தை வெளியிட்டு பிரபலமானவர்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடி வந்த ஜோனிடா, ஏகப்பட்ட பாலிவுட் பாடல்களையும் பாடி உள்ளார். ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் மூலம் பாடகியாக பிரபலமானார். ஏற்கனவே நடிகை ஆண்ட்ரியா உடன் இசையமைப்பாளர் அனிருத் காதல் வசப்பட்டதாகவும், இருவரும், இணைந்து லிப் லாக் கொடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சுச்சி லீக்ஸ் மூலம் வெளியிடப்பட்டு சர்ச்சையை கிளப்பின. ஆனால், அவை மார்ஃபிங் என்றும், அது வெறும் வதந்தி என்றும் கூறப்பட்டது. ஜோனிடா காந்தி காதல் பற்றி என்ன சொல்லப் போகிறார் அனிருத் என்பதை கோலிவுட் திரையுலகம் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.

இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகி உள்ள தளபதி விஜய்யின் மாஸ்டர், சிவகார்த்திகேயனின் டாக்டர் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 உள்ளிட்ட பெரிய படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. மேலும், சில பெரிய படங்களுக்கும் அனிருத் இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளார். ஜெயம் ரவியின் பூமி படத்திற்கு அவர் பாடிய “தமிழன் என்று சொல்லடா” பாடல் யூடியூபில் டிரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.இதனால், இவ்விருவருக்கும் இடையே காதல் இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில், அனிருத் மற்றும் ஜோனிடா நெருக்கமாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் பல கிசுகிசுவில் சிக்கி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.