போ தை க் கு அ டி மை யாகி ய சீரி ய ல் ந டிகை . . . ! ! ! ம ன அ ழு த் த த் தி ல் இ ரு ந் த தா ல் த ன் னை தா னே கா யப் ப டுத் தி க் கொ ண் ட சீ ரி ய ல் ந டி கை . . . ! ! ! அ து வு ம் எ ந் த சீ ரி ய ல் ந டிகை தெ ரி யுமா …!!!வீ டியோ வை பா ர் த் தா ல் நி ங் க ளே ஷா க் க யி டு வி ங் க . .. ! ! !

0

பி  ரபல சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி சமீபத்தில் கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் தான் கடந்த சில மாதங்களாக அதிகம் டிப்ரெஷன் உடன் இருப்பதாக கூறி இருக்கிறார். மேலும் அவரது உடலில் இருக்கும் சில காயங்களையும் வீடியோவில் காட்டி இருந்தார் அவர். அதை பார்த்து அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர். என்ன ஆச்சு என பலரும் அவரிடமே கேட்டு வருகின்றனர். அஜித்தின் வலிமை படம் ரிலீஸ் ஆன போது அவர் தியேட்டர் வாசலில் youtube சேனலிடம் படம் தனக்கு பிடிக்கவில்லை என கூறி இருந்தார். அதனால் அவரை அஜித் ரசிகர்கள் மிக மோசமாக சமூக வலைத்தளங்களில் தாக்கி பேசினார்கள். வளர்ந்து வரும் இளம் சீரியல் நடிகையாக அறியப்படுபவர் நடிகை ஸ்ரீநிதி. கல்லூரி படித்துக்கொண்டே நடிப்பிலும் கவனம் செலுத்தும் ஸ்ரீநிதி கடந்த ஆறு மாதங்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக கூறி வீடியோ ஒன்றினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.அந்த வீடியோவில் தனது உடலில் காயங்கள் இருப்பதையும் அவர் பகிர்ந்திருந்தார். இது சின்னத்திரை வட்டாரத்தில் மட்டுமல்லாமல் , சமூக வலைத்தளவாசிகள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முன்னதாக ஸ்ரீநிதி வலிமை படம் பார்த்துவிட்டு , படம் நன்றாக இல்லை என சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த அஜித் ரசிகர்கள் , சமூக வலைத்தளங்கள் அவரை சரமாரியாக திட்டித்தீர்த்தனர்.

ஒருவேளை அதுதான் இவரை இத்தகைய மன அழுத்தத்தில் ஆழ்த்தியதோ என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் நேர்காணலில் தனது மன அழுத்தத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து மனம் திறந்திருக்கிறார் நடிகை ஸ்ரீநிதி. அதில் ‘வலிமை பிரச்சனை சாதாரணமாக இருந்த சமயத்தில் நடந்திருந்தால் நான் சமூக வலைத்தளங்களை விட்டு வெளியேறியிருக்க மாட்டேன். அந்த சமயத்தில் நான் ரொம்ப பிரச்சனைகளில் இருந்தேன். எனக்கு அதிலிருந்து வெளியே வர வேண்டும் என இருந்தது. என் ஃபிரண்ட் அந்த படத்தில் நடிச்சிருந்தாங்க. அதனாலதான் அந்த படத்துக்கு போனேன். படம் முடிந்து வெளியே வந்ததும் கேட்ட பொழுது, அஜித் சார் நல்லாயிருக்காருனு சொன்னேன்.

என் ஃபிரண்ட் நடிச்சிருக்கா நல்லாயிருக்குனு சொன்னேன். அதன் பிறகு படம் எப்படி இருக்குனு கேட்டாங்க. படம் எப்படி இருந்ததோ அதைத்தானே சொல்ல முடியும். அதுக்காக அஜித் சார் ரசிகர்கள் என்னை கேவலமா திட்டுனாங்க. அதுல ஒருத்தர் சொல்லியிருந்தாரு. உன்னை மாதிரி பெண்னையெல்லாம் பேச்சுலர் படத்துல வற்ற மாதிரி பிரக்ணன்ட் ஆக்கி விட்டுறனும்னு. ஒரு படத்துக்காக இப்படி சொல்லனுமானு இருந்துச்சு. என் வீட்டுல என் அம்மா, தங்கையை நான்தான் பார்த்துக்கனும். அம்மா நான் எவ்வளவு சம்பாதித்தாலும் யாருக்காவது தூக்கி நன்கொடையா கொடுத்துடுறாங்க. வட்டிக்கு கடன் வாங்கி வச்சுருக்காங்க. என்னால சமாளிக்க முடியலை.

அதோட என்னை எல்லாத்துலையும் பங்கெடுத்துக்க வைக்குறாங்க. நான் நடிக்கனும் , படிக்கனும் , பிக்பாஸ்லயும் போகனும் இதெல்லாம் அம்மாவோட ஆசை. ஒரு பொண்ணு எவ்வளவுதான் பண்ண முடியும் . அவங்க என் மேல பாசமா இருக்காங்க . அதை மறுக்கவே இல்லை. ஆனால் சில நேரங்களில் அவங்க செய்யும் விஷயங்கள் என்னை ரொம்ப கோவப்படுத்துது. அந்த வீடியோவுல இருந்த காயம் நானா ஏற்படுத்தியது கிடையாது. அம்மா அடிச்சது. பீர் குடிச்சா தப்பா… என் நண்பர்களே என்னை போதைக்கு அடிமையாகிட்டா ஸ்ரீநிதினு சொல்லுறாங்க. நான் வாரத்துல 6 நாள் உழைக்குறேன். ஒரு நாள் நான் பார்ட்டி பண்ணுறேன் அதுல என்ன தப்பிருக்கு’ என கேள்வி எழுப்பியிருக்கிறார் ஸ்ரீநிதி

 

 

 

View this post on Instagram

 

A post shared by Nidhi (@sreenidhi_)

 

Leave A Reply

Your email address will not be published.