கேஜீஎஃப் திரை ப் ப ட த் தில் ந டி த் த ரா க் கி பா யி ன் அ ம் மா ஒ ரு த மி ழ் சீ ரி ய ல் ந டி கையா ம் .. . ! ! ! அ து உ ங் க ளுக் கு தெ ரியு மா .. . ?? ? அது வு ம் இந்த சி ரி ய ல் ன்னு தெ றி ச் ச நிங் க ளே ஷா க் கா யி டுவி ங் க. . . ! !!

0

KGF Chapter 2ராக்கி பாயின் அம்மாசுப்புலட்சுமி என்ற சன் டிவி சீரியலில் அர்ச்சனா ஜோய்ஸ் நடித்துள்ளார். ஆனால் ஒரு சில காரணங்களுக்காக அந்த சீரியல் இதுவரை ஒளிபரப்பாகவில்லை. KGF திரைப்படம்,ராக்கி பாய் என்றாலே ஒரு சில விஷயங்கள் தவறாமல் கண்முன் தோன்றிவிடும், அதில் கேஜீஎஃப் திரைப்படத்தின் வசனம், மாஸ் சீன்ஸ் தவிர்த்து திரைப்படத்தில் ராக்கி பாயின் அம்மாவாக நடித்தவரை தவிர்க்க முடியாது. கன்னட நடிகை ஒருவர் யாஷின் அம்மாவாக KGF பாகம் ஒன்று மற்றும் இரண்டில் நடித்துள்ளார். இவரை பற்றி வெளிவரும் ஒவ்வொரு தகவலும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. தென்னந்திய திரையுலகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே மிகப்பெரிய சென்சேஷனாக பேசப்பட்டு வருகிறது கேஜீஎஃப் திரைப்படம். நடிகர் யாஷை இந்திய அளவில் ஒரு ஸ்டாராக மாறியுள்ள KGF திரைப்படத்தின் பாகம் 1 சில ஆண்டுகளுக்கு முன் வெளியானது.கன்னட மொழியில் வெளியான திரைப்படம் எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு பிளாக் பஸ்டர் வெற்றி பெற்றது.

முதல் பாகத்தின் வெற்றி, அடுத்தடுத்த பாகங்கள் எப்போது வரப்போகிறது என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியது. அதை நிறைவேற்றும் வகையில் KGF சீக்வல் தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகி இந்தியா முழுவதும் சக்கை போடு போட்டு வருகிறது. எல்லா கலெக்ஷன்களையும் தோற்கடித்து, கோடிக்கணக்கில் வசூலித்து வருகிறது. அது மட்டுமின்றி கன்னட நடிகரான யாஷ் ஒரு பான்-இந்தியா ஸ்டாராகவும் ஆகி விட்டார். இந்த திரைப்படத்திற்காக ஆறு வருடங்களாக உழைத்துள்ளார்.இந்திய அளவில் அல்லது உலக அளவில் புகழ் பெறுவதற்கு மிகவும் கடின உழைப்பு தேவை ஆனால் ஒரு சிலருக்கு சிறிய கதாப்பாத்திரத்தில் ஒரு சில காட்சிகளில் தோன்றினாலேயே

நீடித்திருக்கும் புகழும் பெயரும் கிடைத்துவிடும் அவர்களில் ஒருவர்தான் ராக்கி பாயின் அம்மாவாக நடித்த நடிகை. KGF திரைப்படத்தின் வெற்றிக்கு மாஸ் எலிமென்ட்ஸ் காரணமாக இருந்தாலும், மிக அழுத்தமான அம்மா சென்டிமென்ட் இருந்ததும் மற்றொரு காரணம் என்று கூறப்படுகிறது.ராக்கி பாயின் அம்மா பாத்திரத்தில் நடித்த நடிகை, உண்மையில் யாஷை விட இளையவர். இவருடைய பெயர் அர்ச்சனா ஜோய்ஸ் மற்றும் இவரின் வயது 27. அர்ச்சனா ஒரு கதக் நடனக் கலைஞர் மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்து வருகிறார். அர்ச்சனா கேஜிஎப் பாகம் ஒன்றின் மூலம் மிகப்பெரிய பிரபலமானார். பெரிய அளவில் பேசப்பட்டார். தற்போதும் இவருக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.

இவ்வளவு இளமையாக அழகாக இருக்கிறாரே, இவரை ஹீரோயினாகவே நடிக்க வைக்கலாம் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் அர்ச்சனா ஜோய்ஸ் பற்றி இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அர்ச்சனா ஒரு சீரியலில் நடித்துள்ளார் என்பது தான் அது. அதுவும் தமிழ் சீரியலில் அர்ச்சனா ஜாய்ஸ் நடித்துள்ளார் என்ற தகவல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. சுப்புலட்சுமி என்ற சன் டிவி சீரியலில் அர்ச்சனா ஜோய்ஸ் நடித்துள்ளார். ஆனால் ஒரு சில காரணங்களுக்காக அந்த சீரியல் இதுவரை ஒளிபரப்பாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.