ச ற் று முன் பி ரப ல த மி ழ் தி ரை ப் ப ட ந டி கை க ண வ ரு ட ன் சே ர் ந் து கை து . . . ! ! ! யா ர் அந்த ந டி கை தெ ரி யு மா . . . ! ! ! இ வ ர் க ள் கை தா ன கா ர ண த் தை கே ட் டு ஆ ச் ச ர் ய த் தில் ரசி க ர் க ள் . . . ! ! !

0

பிரபல நடிகையும், எம்.பியுமான நவ்நீத் கவுர் கணவருடன் சேர்ந்து கைது செய்யப்பட்டார்.நவநீத் கௌர் 3 ஜனவரி 1986 என்பவர் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தெலுங்கு திரைப்படங்களில் அதிகம் பணியாற்றியுள்ளார். இவர் 2019 இந்தியப் பொதுத் தேர்தலில், மகாராஷ்டிரா மாநிலத்தின் அமராவதி மக்களவைத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு வென்றார். நவனேட் மும்பை மகாராஷ்டிராவில் பிறந்தவர். இவருடைய பெற்றோர்கள் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். இவரது தந்தை ராணுவத்தில் பணியாற்றியவர். கார்த்திகா மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு முடித்தார். 12 ஆம் வகுப்பை இடைநிறுத்தம் செய்துவிட்டு, மாடல் அழகி ஆனார். கன்னட திரைப்படமான தர்சன் என்பதில் முதன்முதலாக நடித்தார். தமிழில் விஜய்காந்துடன் அரசாங்கம் திரைப்படத்தில் நடித்தவர் நவ்நீத் கவுர். இவர் அம்பாசமுத்திரம் அம்பானி உள்ளிட்ட தமிழ் படங்களிலும் பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் எம்.பியாகவும் உள்ளார். இந்நிலையில் சிவசேனா கட்சித் தலைவரும், மகாராஷ்டிர மாநில முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே வீட்டின் முன்பு ஹனுமன் சாலீசா பாடப் போவதாக, நவ்நீத் ரானாவும், அவரது கணவரும், சுயேச்சை எம்.எல்.ஏ.,வுமான ரவி ரானாவும் அறிவித்தனர்.

அதனை படித்து மாநிலத்தில் உத்தவ் தாக்கரே அமைதியை நிலைநாட்ட வேண்டும். மாநிலத்தின் நலன் கருதி உத்தவ் தாக்கரே அனுமன் சாலீசா பாட வேண்டும் எனக் கூறியிருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா கட்சியினர் அவர்கள் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.ரவி ராணா, பின்னர் யுவா ஸ்வாபிமான் ( Yuva Swabhiman Party) என்ற கட்சியை தொடங்கினார். வருகிற மக்களவைத் தேர்த லில், காங்கிரஸ் கூட்டணியில் இந்தக் கட்சி இணைந்துள்ளது. இந்தக் கட்சிக்கு, அமராவதி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தனது மனைவி நவ்நீத் கவுரை நிறுத்தியுள்ளார் ரவி ராணா. கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் இதே தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில்

இவர் போட்டியிட்டு சிவசேனா வேட்பாளர் ஆனந்த் ராவ் அட்சுல்லிடம் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதனையடுத்து மும்பை பொலிசார், சட்டம் – ஒழுங்கை பாதிக்கும் வகையிலான செயல்களில் ஈடுபடக் கூடாது என எச்சரிக்கை விடுத்ததுடன், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் இல்லத்தில் பாதுகாப்பை பலப்படுத்தினர். ரவி ரானா மற்றும் நவ்நீத் ரானா வீட்டின் முன்பும் போலீசார் குவிக்கப்பட்டனர்.இந்நிலையில், நவ்நீத் ரானா மற்றும் அவரது கணவர் ரவி ரானா இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர். சிவசேனா கட்சியினர் மத நம்பிகை  புண்படுத்தியதாக அளித்த புகாரில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.