ச ற் று முன் ர ஜி னிகா ந் த் , க ம ல் ஹா ச ன் தி ரை ப்ப டத் தில் ந டி த் த பி ர ப ல ந டி க ர் மா ர டை ப் பா ல் தி டீ ர் ம ர ண ம் . . . ! ! ! பெ ரும் சோ க த்தி ல் தி ரை யு ல கி ன ர் க ள் . . . ! ! ! அ தி ர் ச் சி யில் ர சி க ர் க ள் . . . ! ! !

0

70-கள் மற்றும் 80-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கிய பிரபல நடிகர் சக்கரவர்த்தி இன்று காலமானார். தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று இன்றைய இளைய இயக்குனர்களும் ஏற்றுக்கொள்ளும் ஒரு காலமாக 70-கள் மற்றும் 80-கள் காலமும், அந்த காலகட்டங்களில் வந்த திரைப்படங்களும் உள்ளன.தமிழ் திரையுலகில் 80 திரைப்படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் நடிகர் சக்ரவர்த்தி இன்று அதிகாலை மும்பையில் மரணமடைந்துள்ளார். இவருக்கு 62 வயது.சிவாஜி, ரஜினி, கமல் என்று பல நாயகர்களுடன் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சக்ரவர்த்தி. ரிஷி மூலம் படத்தில் சிவாஜியுடன் நடித்திருந்தது பலராலும் பாராட்டப்பட்டது. இவர் சினிமாவில் இருந்து விலகி மும்பையில் தற்போது வசித்து வந்தார்.மேலும் சக்ரவர்த்தி சோனி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பின்னணி குரல் கொடுக்கும் பணியில் இருந்து வந்தார். இன்று அதிகாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தூக்கத்திலேயே உயிர் பிரிந்திருக்கிறது என தகவல் வெளியாகி உள்ளது.

காலையில் மனைவி லலிதா அவரை எழுப்பிய போதுதான் அவர் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. சக்ரவர்த்தி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினராக இருக்கிறார்.அத்தோடு அவருக்கு லலிதா என்ற மனைவியும், சசிகுமார், அஜய் குமார் என்ற இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். சசிகுமார் மும்பை விப்ரோ கம்பெனியில் பணியாற்றுகிறார். அஜய்குமார் எம்.எஸ்சி படித்து வருகிறார். கண் மலர்களின் அழைப்பிதழ் என்ற ஹிட் பாடலில் ராதிகாவுடன் நடனம் ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த கால கட்டங்களில் நடித்த பல முக்கிய நடிகர்களுள் ஒருவர் தான் நடிகர் சக்கரவர்த்தி.

ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் அவர்களது திரைப்படங்களில் நடித்த நடிகர் சக்கரவர்த்தி ரிஷிமூலம், ஆறிலிருந்து அறுபதுவரை, முள் இல்லாத ரோஜா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இவற்றில் ரிஷிமூலம் திரைப்படத்தில் நடிகர் சிவாஜி கணேசனுடனும், சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தில் வடிவுக்கரசி அண்ணனாகவும், ஆறிலிருந்து அறுபது திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு தம்பியாகவும் நடிகர் சக்கரவர்த்தி தோன்றியிருப்பார். தொடர்ந்து தர்ம யுத்தம், தூக்குமேடை, கொட்டுமுரசே, உதயகீதம், புதிய பயணம் உள்ளிட்ட பல படங்களில்

குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் சக்கரவர்த்தி, பின்னாட்களில் பிரபல புகழ்பெற்ற ஸ்போர்ட்ஸ் சேனலான சோனி ஸ்போர்ட்ஸ் சேனலில் பின்னணி வாய்ஸ் ஓவரும் கொடுத்துக்கொண்டிருந்தார். இந்த நிலையில் நடிகர் சக்கரவர்த்தி, மும்பையில் உள்ள தமது இல்லத்தில் அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த போது மாரடைப்பால் மரணம் அடைந்திருக்கிறார். அவரை எழுப்பச் செல்லும்பொழுது அவர் இயற்கை அடைந்து இருந்தார் என்பதை அவருடைய மனைவியே முதலில் அறிந்துள்ளார். நடிகர் சக்ரவர்த்தியின் மறைவுக்கு தமிழ் திரை உலகை சேர்ந்தவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் ‌.

Leave A Reply

Your email address will not be published.