பி ரப ல நி க ழ் ச் சி ஒ ன் றி ல் தீடீ ரெ ன மே டை யி ல் க த றி அ ழு த ந டி கை சி னே கா .. . ! ! ! ஏ ன் அ ழு தா ர் எ ன் று உ ங் க ளு க் கு தெ ரி யுமா . . . ? ? ? அ தை கே ட் டு க ண் ணீ ர் விட் ட ர சி க ர் க ள் . . . ! ! !

0

தமிழ் சினிமாவில் தனது சிரிப்பினால் ரசிகர்களை கவர்ந்து புன்னகை அரசி என்று பேரெடுத்தவர் நடிகை சினேகா.சினேகா எனப்படும் சுகாசினி இராசாராம் நாயுடு தென்னிந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவரது ரசிகர்கள், குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவரை விரும்புகின்றனர். 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.சினேகா மும்பையில் இராசாராம் பத்மாவதி தம்பதியினருக்கு சுகாசினியாகப் பிறந்தார் .அவளுடைய குடும்பம் அவளுடைய பிறப்புக்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷார்ஜாக்குச் சென்றது, அங்கு அவர் ஓன் ஆங்கில உயர்நிலை பள்ளியில் படிப்பை முடித்தார் . பின்னர் அவர் குடும்பத்தினர் தமிழ்நாட்டில் உள்ள பண்ருட்டி என்னும் ஊரில் குடியேறினர். அங்கே இவருக்கு சொந்தமாக திருமண மண்டபம் ஒன்றும் உள்ளது.சினேகா முதலில் மலையாளத்தில் இங்கனே ஒரு நீல பாக்ஷி என்ற படத்தில் நடனமாடி நடித்துள்ளார்.

பின்னர் தமிழ் படங்களில் கவனம் செலுத்தினார். என்னவளே படத்தில் நடித்து புகழ் பெற தொடங்கினார். மம்மூட்டியுடன் ஆனந்தம் படத்தில் நடித்தார். இப்படத்தில் பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் பாடலில் நடித்து புகழ் பெற்றார் . இதற்கு தமிழ்நாடு சிறந்த நடிகை விருது கிடைத்தது . தொடர்ந்து புன்னகை தேசம் , உன்னை நினைத்து, விரும்புகிறேன் ஆகிய படங்களில் விருது பெற்றார். பார்த்திபன் கனவு, ஆட்டோகிராப் என்று சுமார் எழுபது படங்களில் நடித்துள்ளார். 2009 இல் சினேகா முதல் முறையாக பிரசன்னாவுடன் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்தார். பின்னர், பிரசன்னா சினேகா வின் மாடலிங் நிகழ்ச்சிகளில் காணப்பட்டார்.

ஊடகங்களில் அதை வதந்தியாக மறுத்த போதிலும் நவம்பர் 9, 2011 அன்று பிரசன்னா தனது காதலை உறுதிப்படுத்தி மே 11, 2012 இல் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர் . தற்போது சினேகா சென்னையில் கணவருடன் வசித்து வருகிறார். 2015 ஆகஸ்ட் 10 இல் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது .அக்குழந்தைக்கு விஹான் என்று பெயர் சூட்டினார்கள்.இந்நிலையில் கடந்த மாதம் சினேகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.தங்களது 2-வது குழந்தைக்கு ஆத்யந்தா என்று பெயர் சூட்டியிருப்பதாக நடிகர் பிரசன்னா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இவர் திருமணத்திற்கு பிறகு சில படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் கடைசியாக பட்டாஸ் திரைப்படம் வெளிவந்தது.அதனை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபுவுடன் இணைந்து புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிகை சினேகா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஜூனியர் சூப்பர்ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வருகிறார். கதறி அழுத சினேகா இந்நிலையில், வரும் ஞாயற்று கிழமை அன்று ஒளிபரப்பாகவுள்ள ஜூனியர் சூப்பர்ஸ்டார்ஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டியின் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.  இதில், தீடீரென யாரோ ஒருவரை பார்த்து, கதறி அழுகிறார் நடிகை சினேகா. அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by zeetamil (@zeetamizh)

Leave A Reply

Your email address will not be published.