ஆ ஸ்க ர் வி ரு து வெ ன் ற வி ல் ஸ் மித் . . . ! ! ! மே டை யி ல் தொ கு ப் பா ள ரை பளா ர் எ ன அ டி த் த தா ல் பெ ரும் ப ர ப ர ப் பை ஏ ற் ப் ப டு த் தி யு ள் ள து . . . ! !! வீ டி யோ வை பார் த் து அ தி ர் ச் சிய டை த் த ர சிக ர் க ள் . . . ! !!

0

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில் தொகுப்பாளரை பிரபல நடிகர் வில் ஸ்மித் அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கிய 94வது ஆஸ்கர் விருது விழாவில், சிறந்த நடிகருக்கான விருதை ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் பெற்றுள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஹாலிவுட் பவுல்வார்ட்டில் உள்ள டால்பி திரையரங்கத்தில் நடைபெறும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவானது, இந்த ஆண்டு வழக்கமான பாரம்பரிய முறைப்படி நடைபெறுகிறது.ஆஸ்கர் விருது விழா கடந்த 4 வருடங்களாக தொகுப்பாளர்கள் இன்றி நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு வாண்டா சைக்ஸ், ஏமி ஸ்கூமர், ரெஜினா ஹால் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர். ஆஸ்கர் விருது விழாவை மூன்று பெண்கள் தொகுத்து வழங்குவது இதுவே முதன்முறை.

சிறந்த நடிகர் இந்த நிலையில், சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை ஹாலிவுட் நடிகர் “வில் ஸ்மித்” தட்டி சென்றுள்ளார். “கிங் ரிச்சர்ட்“ திரைப்படத்திற்காக வில் ஸ்மித்துக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.இந்த சண்டைக் காட்சிக்குப் பிறகு வந்த கமர்ஷியல் பிரேக்கில் நடிகர் டென்சல் வாஷிங்டன் வில் ஸ்மித்தை தனியாக அழைத்துச் சென்று பேசி அவரை கூல் செய்திருக்கிறார்.நகைச்சுவை நடிகர் க்ரிஸ் ராக்கை ஆஸ்கர் விருது விழா மேடையில் வைத்து நடிகர் வில் ஸ்மித் கன்னத்தில் அறைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யுஎஸ்ஸில் தயாராகும் படங்களுக்கான விருது ஆஸ்கர்.

சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்று ஒரேயொரு விருதுக்கு மட்டும் பிற நாடுகளின் படங்கள் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும். எனினும், உலகம் முழுவதும் அதிகம் பேர் பார்க்கும் விருது விழா இதுவே. ஆஸ்கர் விருது பெறுவது உலகளாவிய கௌரவமாகப் பார்க்கப்படுகிறது. அந்த மேடையில் ஒரு நடிகர் சக நடிகரை பளாரென்று அறைகிறார் என்றால் அதிர்ச்சியாகத்தானே இருக்கும்.க்ரிஸ் ராக் தனது நகைச்சுவையான பேச்சுக்கு பிரபலமானவர். 94-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த டாக்குமெண்ட்ரி பியூச்சருக்கான விருதை அறிவிக்க மேடையேறியவர்,

நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித்தை குறித்து ஜோக் அடித்தார். மனைவியுடன் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த வில் ஸ்மித்தும் அந்த ஜோக்குக்கு சிரித்தவர் திடீரென மேடைக்கு வந்து க்ரிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்தார். யாரும் இதனை எதிர்பார்க்கவில்லை. க்ரிஸ் ராக் அதிர்ச்சியிலிருந்து மீண்டு, Wow Will Smith just smacked the s**t out of me என்று நிலைமையை சமாளிக்க முயன்றார். ஆனால், பார்வையாளர்கள் பகுதிக்கு திரும்பிய வில் ஸ்மித் அங்கிருந்தபடியே சத்தமாக இருமுறை மென் கெட்டவார்த்தையுடன்,

என் மனைவியின் பெயரை உன் வாயால் சொல்லாதே என்றார். ஏற்கனவே சொல்லி வைத்த ட்ராமாவாக இருக்கும் என நினைத்தவர்களுக்கு அப்போதுதான் இது ட்ராமா இல்லை நிஜம் என்ற உண்மை உறைத்தது வில் ஸ்மித்தின் கோபத்துக்கு ஆறு வருட பழமை உள்ளது. 2016-ல் ஆஸ்கரின் முக்கிய விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியலில் கறுப்பினவத்தவர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. ஒட்டு மொத்தமாக அவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இதனால், ஆஸ்கர் விழாவை புறக்கணிப்பதாகக் கூறி, வில் ஸ்மித் உள்ளிட்ட முக்கியமான கறுப்பின கலைஞர்கள் ஆஸ்கர் விழாவில் கலந்து கொள்ளவில்லை.

இந்த புறக்கணிப்புக்கு தலைமை வகித்தவர் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித். கறுப்பினத்தவர்களின் விமர்சனத்தை எதிர்கொள்ளும் பொருட்டு அந்த ஆஸ்கர் விழாவில் கறுப்பின நடிகரான க்ரிஸ் ராக்கை பேச வைத்தனர்.
ஆஸ்கர் விருது வெள்ளைக்காரர்கள் தேர்வு செய்யும் விருதாகிவிடும், அதனால் தான் நான் இங்கு வந்தேன் என்று ஆரம்பித்து அட்டகாசமான உரையை அன்று க்ரிஸ் ராக் பேசினார். கறுப்பின கலைஞர்கள் புறக்கணிக்கப்படுவதை சுட்டிக் காட்டிய அவர், ஜடா பிங்கெட் ஸ்மித் தலைமையில் கறுப்பின கலைஞர்கள் விழாவை புறக்கணித்ததையும் விமர்சனம் செய்தார்.

ஜடா ஆஸ்கரை புறக்கணித்ததற்கு காரணம், அவரது கணவர் வில் ஸ்மித் கன்கெஷன் படத்துக்காக சிறந்த நடிகர் விருதுக்கு பரிந்துரைக்கப்படாதது தான் என்று விமர்சித்தார். வில் ஸ்மித் சிறந்த நடிகர் விருதுக்கு தேர்வு செய்யப்படாதது சரியில்லை தான். நானும் ஒத்துக் கொள்கிறேன். அதேபோல் வைல்ட் வைல்ட் வெஸ்ட் திரைப்படத்துக்கு அவருக்கு 22 மில்லியன் டாலர்கள் சம்பளம் கொடுத்ததும் சரியில்லை என்றார். ஆஸ்கர் விருது சரித்திரத்தில் இடம்பெற்ற முக்கியமான உரையாக க்ரிஸ் ராக்கின் பேச்சை குறிப்பிட்டனர். அத்தனை நகைச்சுவையாகவும், விமர்சனப்பூர்வமாகவும் அது அமைந்திருந்தது.

வில் ஸ்மித், அவரது மனைவி போன்ற ஒருசிலர் அதில் நேரடியாக காயம்பட்டனர். ஆறு வருடங்கள் கழித்து 94 வது ஆஸ்கர் விருது விழா மேடையில் க்ரிஸ் ராக்கை சந்திக்கும் வாய்ப்பு வில் ஸ்மித்துக்கு கிடைத்தது. பழைய நினைப்பில் இப்போதும் க்ரிஸ் ராக் பிங்கெட் ஸ்மித்தை கமெண்ட் செய்ய, பழைய கோபத்தையும் சேர்த்து மேடையிலேயே பயர் விட்டார் வில் ஸ்மித். மனைவி விஷயத்தில் எந்த ஜென்டில்மேனும் இறங்கி அடிப்பான். வில் ஸ்மித் மட்டும் விதிவிலக்கா.அமெரிக்க ஊடகங்கள் பலவும் வில் ஸ்மித் க்ரிஸ் ராக் மீது நடத்திய ஆக்ஷன் பிளாக்கை வெளியிடவில்லை. ஆனால், பிற மீடியாக்களும்,

பார்வையாளர்களும் தாங்கள் எடுத்த வீடியோவை வெளியிட, வேறு வழியில்லாமல் அமெரிக்க ஊடகங்களும் அந்த வீடியோவை வெளியிட்டு அதுபற்றி செய்தி வெளியிட்டுள்ளன.இந்த சண்டைக் காட்சிக்குப் பிறகு வந்த கமர்ஷியல் பிரேக்கில் நடிகர் டென்சல் வாஷிங்டன் வில் ஸ்மித்தை தனியாக அழைத்துச் சென்று பேசி அவரை கூல் செய்திருக்கிறார். இதில் ஹைலைட், சிறந்த நடிகருக்கான விருதை வில் ஸ்மித் தட்டிச் சென்றார். கண்களில் நீர் வழிய அவர் பேசிய விருது ஏற்புரை அவரது ஆக்ஷன் பிளாக்கை மறக்கச் செய்தது எனலாம். கூடுதலாக ஆஸ்கர் கமிட்டியிடமும், விழாவுக்கு வந்திருந்தவர்களிடமும், வருத்தமும் தெரிவித்துக் கொண்டார்.

சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை டிரைவ் மை கார் (Drive my car) திரைப்படம் வென்றுள்ளது. ஜப்பான் நாட்டு திரைப்படமான இந்த படத்தை யூசுக் ஹமாகுச்சி (ryusuke hamaguchi) இயக்கி உள்ளார். மனைவியை கிண்டல் செய்த தொகுப்பாளர் நடிகரும், ஆஸ்கர் விருது நிகழ்ச்சியும் தொகுப்பாளருமான கிறிஸ் ராக், நடிகர் வில் ஸ்மித்தின் தனது மனைவியைக் குறிப்பிட்டு கிண்டல் அடித்ததால் கோபமடைந்த நடிகர் வில் ஸ்மித், மேடையில் ஏறி கிறிஸ் ராக்கை கன்னத்தில் பளேர் என அறைந்துள்ளார். இக்காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகிவரும் நிலையில், குறித்த சம்பவம் நடிப்பு என்றும் காமெடி க்கு நடந்துள்ளதாக கூறப்படுகின்றது.

 

Leave A Reply

Your email address will not be published.