தனு ஷ் க் கு இ ரு க் கு ற பி ர ச் ச னை போதா து னு த னு ஷை தே டி வ ந் த பு து ஏ ழ ரை . . .! ! ! அ ப் ப டி என் ன தா ன் பி ர ச் ச னை எ ன் று கொ ஞ் ச ம் நி ங் க ளே பா ரு ங் க ளே . . . ! ! !

0

தனுஷை தேடி புது பிரச்சனை வந்திருப்பதை பார்த்து ரசிகர்கள் எச்சரித்துள்ளனர்.இருக்கும் பிரச்சனை போதாது என்று தனுஷை தேடி புது பிரச்சனை வந்திருக்கிறது. தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான தனுஷ், ஐஸ்வர்யா ஜோடி இருவரும் கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் திடீரென கடந்த ஜனவரி மாதம் பிரிய போவதாக அறிவித்தனர். தனுஷ், ஐஸ்வர்யாவின் இந்த திடீர் முடிவு ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்திற்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது. விவாகரத்து அறிவிப்பிற்கு பின்னரும் சோஷியல் மீடியா பக்கங்களில் தனுஷ் பெயரை நீக்காமல் வைத்திருந்தார் ஐஸ்வர்யா. இதனால் இருவரும் மீண்டும் சேருவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில் திடீரென கடந்த சில தினங்களுக்கு முன்பாக ட்விட்டரில்

தனக்கு பின்னாடி இருந்த தனுஷ் பெயரை நீக்கி, தனது தந்தை ரஜினிகாந்த் பெயரை இணைத்தார் ஐஸ்வர்யா. அதனை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தனுஷ் பெயரை நீக்கினார். அவரின் இந்த செயல்பாடு ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது.இந்நிலையில் ஐஸ்வர்யா தற்போது தனுஷின் அண்ணன் மனைவி செல்வராகவன் கீதாஞ்சலியுடன் இருப்பதை போன்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தனுஷ் பெயரை நீக்கிவிட்டு அவரின் குடும்பத்தினருடன்

ஐஸ்வர்யா நெருக்கம் காட்டுவது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகள் கழித்து தன் அண்ணனும், குருவுமான செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார் தனுஷ். நானே வருவேன் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் அந்த படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். நானே வருவேன் படத்தை இயக்குவதுடன், வில்லனாக நடிக்கிறார் செல்வராகவன். அண்ணனும், தம்பியும் மோதப் போகும் காட்சிகளை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.தனுஷ் ஒரு நாற்காலியில் கெத்தாக அமர்ந்து புகைப்பிடிப்பது போன்ற

போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டர் பார்க்க நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் தனுஷ் வாயில் இருக்கும் சிகரெட்டை பார்த்தவர்கள்,  அய்யோ அண்ணா இந்த போஸ்டர் வேண்டாம். புகைப்பிடித்தால் அந்த கோஷ்டி கிளம்பி வந்து பிரச்சனை கொடுக்கும். உங்களுக்கு ஏற்கனவே நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. இதில் இது வேறு தேவையா என தெரிவித்துள்ளனர்.முன்னதாக ஊட்டியில் படப்பிடிப்பு நடந்தபோது தன் மூத்த மகன் யாத்ராவை அழைத்துச் சென்றார் தனுஷ்.

யாத்ராவுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதை பார்த்த அனைவரும், தனுஷுக்கு தான் மகன்கள் மீது அதிக பாசம் என்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.காதல் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்த பிறகு தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். அப்படியாவது தன் கவனத்தை திசை திருப்பலாம் என்று தான். முன்னதாக ஐஸ்வர்யாவுடன் பிரச்சனை ஏற்பட்டபோது எல்லாம் புதுப்படத்தில் ஒப்பந்தமாகி வந்தார் தனுஷ்.

Leave A Reply

Your email address will not be published.