க டன் பி ர ச் ச னை யா லே ம ர ண ம டை ந் த ந டி கை சா வி த் ரி . . . ! ! ! அ ந் த ந டி க ரு ட ன் ம து போ ட் டி தா ன் கா ர ண மா . . . ? ? ? யா ர் அ ந்த நடி க ர் தெ ரி யு மா .. . ? ? ? ப ல ஆ ண் டு க ள் க ழி த் து வெ ளி யா ன வீ டி யோ வை க ண் டு அ தி ர் ச் சி ய டை த் த ர சி க ர் க ள் .. . ! !!

0

நடிகையர் திலகம் என சினிமா ஆர்வலர்களால் அன்போடு அழைக்கப்பட்ட மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமாக தயாராகிறது. முன்னணி சினிமா தயாரிப்பு நிறுவனம், இந்த கதையை தமிழ், தெலுங்கு மொழிகளில் சினிமா படமாக தயாரிக்கிறது. தென்னிந்திய திரையுலகில் 1950, 60 மற்றும் 70களில் சகாப்தமாக வாழ்ந்தவர் நடிகை சாவித்திரி. சிவாஜி கணேசனுக்குப் போட்டியாக நடிக்கும் பெண் நடிகை எனப் போற்றப்பட்டவர். இவரது நடிப்புத் திறனை பார்த்து, நடிகையர் திலகம் என்றே பலரும் அழைத்தனர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் மொத்தம் 318 படங்களில் நடித்து, ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஈர்த்தவர் சாவித்திரி. குறிப்பாக, எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ரங்காராவ் ஆகியோருடன் பல படங்களில் நடித்தும் இருந்தார். ஆனால், அவரது சொந்த வாழ்க்கை துயரங்கள் நிறைந்ததாகும். இதை வெளி உலகுக்கு தெரிவிக்கும் விதமாக, படம் தயாரிப்பதாகவும், விரைவில் முறையான அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் சினிமாவில் 15 வயதில் சினிமாவில் அறிமுகமாகிய நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சாவித்ரி. நடிகையர் திலகம் என்ற பெயரை தன்னுடைய சிறப்பான நடிப்பால் புகழப்பட்டவர். அறிமுகமாகிய ஒரே வருடத்தில் நடிகர் ஜெமினி கணேசனை திருமணம் செய்து இரண்டாம் மனைவியானார்.சாவித்திரி ஆந்திரப் பிரதேசத்தில் குண்டூரில் சிறாவூர் என்ற இடத்தில் நிசங்கர குருவையா ரெட்டி, சுபத்திரம்மா ஆகியோருக்குப் மகளாக பிறந்தவர். சாவித்திாியின் இயற்பெயர் சரசவாணிதேவி என்பதே ஆகும். சிஸ்டா பூர்ணையா சாத்திரிகளிடம் இசை மற்றும் நடனம் பயின்றார். இளம் வயதிலேயே மேடைகளில் தோன்றி நடித்தார்.

1952-ஆம் ஆண்டு இவர் நடிகர் செமினி கணேசனை மணந்தார். திருமணத்திற்கு பிறகும் தன் நடிப்பின் ஆர்வத்தை காட்டி சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 30 ஆண்டுகளாக சினிமாத்துறையில் நடித்த சாவித்ரி 1981ல் உடல்நலக்குறைவால் காலமானார். கணவர் இறப்பதற்கு முன்பே மரணமடைந்தார் சாவித்ரி. அதுவும் நடிகர் சந்திரப்பாபுவுடன் போட்டிபோட்டு மதுவினை அருந்தியதாக நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.19 மாதங்கள் கோமா என்னும் ஆழ்மயக்க நிலையில் இருந்த

சாவித்திரி 1981 திசம்பர் 26-ஆம் நாள் இறந்தார். அப்போது அவருக்கு வயது 45. அப்போது அவருக்கு நீரிழிவு நோயும் உயர் இரத்த அழுத்தமும் இருந்தன. இந்திய அரசு அவரது நினைவாக 2011-ஆம் ஆண்டு நினைவுத் தபால் தலை ஒன்றையும் வெளியிட்டது. குடி போதையால் தான் சாவித்ரியின் மரணத்திற்கு காரணமாக அமைந்தது என்றும் தன் கணவர் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் குடித்தாராம். சொந்த படம் எடுத்து கடனாளியாகவே மரணமடைந்தார் நடிகை சாவித்ரி.

Leave A Reply

Your email address will not be published.