ந டிக ர் சி ம் புவி ன் கா ர் மோ தி ய தி ல் மு தி ய வ ர் ப லி . . . ! ! ! கோ ம ரா வி ல் சிக் கி ய வீ டி யோ ஆதா ர ம் பெ ரு ம் ப ர பர ப் பை ஏ ற் ப்ப டு த் தி யு ள்ள து . . .! ! !

0

நடிகர் சிம்புவின் கார் மோதி முதியவர் ஒருவர் பலியானதை அடுத்து அந்த காரில் சிம்பு இருந்தாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 18ஆம் தேதி தேனாம்பேட்டை இளங்கோ நகர் பகுதியில் சிம்புவின் கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென முதியவர் ஒருவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அந்த முதியவர் பலியானார். கடந்த வெள்ளிக்கிழமை, சென்னை தேனாம்பேட்டை இளங்கோ சாலை அருகே முனுசாமி என்ற பிச்சைக்காரர் சாலையை கடக்க முயன்ற போது, அங்கு வந்த நடிகர் சிம்புவின் கார் முதியவர் மீது மோதியது. இந்த நிலையில் கார் டிரைவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்தபோது அந்த காருக்கு சொந்தக்காரர் சிம்பு என்பது தெரியவந்தது. மேலும் டிரைவர் செல்வத்தை கைது செய்த போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த கார் முதியவர் மீது மோதும் போது காரில் சிம்பு அல்லது அவரது குடும்பத்தைச் சேர்ந்த யாராவது காரில் இருந்தார்களா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் முதியவர் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த அவரை அவசரமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அந்த முதியவர் உயிரிழந்தார். இந்நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில்,

விபத்து ஏற்படுத்திய கார் நடிகர் சிலம்பரசன் கார் என்பது உறுதியாகியுள்ளது. ஓட்டுநர் செல்வம் என்பவர் அந்த காரை ஓட்டி வந்துள்ளார்.அப்போது, காருக்கு பின்னால் இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் காரில் இருந்துள்ளார். ஆனால், இந்த விபத்திற்கும், டி.ராஜேந்தருக்கும் சம்பந்தம் இல்லை என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். அ தனையடுத்து டிரைவர் ஓட்டுநரை கைது செய்த போலீசார் அவரை ஜாமீனில் விடுவித்தனர். இது குறித்த CCTV காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.