பிர ப ல இ ள ம் ந டி கை ம ர ண ம் . . . ! ! ! ஹோ லி ப ண் டி கை மு டி த் து வீ டு தி ரு ம் பி ய ந டி கை உ யி ரி ழ ப் பு . . . ! ! ! பெ ரு ம் அ தி ர் ச் சி யி ல் கு டு ம் ப த் தி ன ர் ம ற் று ம் ர சி க ர் க ள் . . . ! ! !

0

தெலுங்கு சினிமாவில் துணை நடிகையாக நடித்து மக்களிடம் பிரபலம் ஆனவர் காயத்ரி. படங்களில் நடிப்பதை தாண்டி வெப் சீரியஸ், தொலைக்காட்சி தொடர்கள் போன்றவற்றிலும் நடித்துள்ளார்.நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை ஹோலிப் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், நடிகை காயத்ரி தனது நண்பரும், தொழிலதிபருமான 25 வயதான ரோகித் என்பவருடன் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஹோலி கொண்டாட்டங்களில் பங்கேற்றார். ஆட்டம் பாட்டம் என களைகட்டிய ஹோலி கொண்டாட்டத்தில் வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் மது அருந்தியதாகத் தெரிகிறது. துணை நடிகை காயத்ரியும், அவரது நண்பர் ரோகித்தும் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. மாலை வேளையில் வீட்டிற்கு கிளம்பிய அவர்கள் காரில் புறப்பட்டனர். ரோகித் குடிபோதையில் கார் ஓட்ட காயத்ரி காரில் அமர்ந்து சென்றுள்ளார்.

கச்சிபௌலி அருகே, ஹெச்.எம்.டி மலைப் பகுதியில் காரை அதிவேகத்தில் ஓட்டிச் சென்றுள்ளார் ரோகித். ‘எல்லா’ மருத்துவமனை அருகே தோட்டக்கார பெண் 38 வயதான மகேஸ்வரி என்பவர் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது தறிகெட்டு வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் ஏறி மகேஸ்வரி மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் தலைகீழாகக் கவிழ்ந்து உருண்டு, அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த துணை நடிகை காயத்ரி, தோட்டக்கார பெண் மகேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. எல்லோரும் கொண்டாட காயத்ரியும் தனது நண்பர்களுடன் ஹோலி பண்டிகை கொண்டாடியுள்ளார். கொண்டாட்டத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது படு பயங்கர கார் விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார்.இருவர் பலி கார் மருத்துவமனை முன் வேலை செய்துகொண்டிருந்த பெண் மீது மோத அந்த பெண்ணும், நடிகை காயத்ரியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காரை ஓட்டிவந்த அவரது நண்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மது போதையில் காயத்ரியின் நண்பர் கார் வேகமாக ஓட்டியதே விபத்தின் காரணம் என கூறப்படுகிறது. 26 வயதான நடிகையின் இந்த மரணம் தெலுங்கு சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.ஆகியோரின் உடல்கள் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. காயத்ரி உரிழப்புக்கு தெலுங்கு திரையுலகினர் பலரும் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.