பாட் டு பிடி ச் சி ருக் கா .. ! உ ங் கள் மா ம னா ர் தா ன் இ த ற் கு கார ண ம் . . ! ! ! மே டை யி ல் த னுஷை கி ண் ட ல டி த் த இ ளை ய ரா ஜா . . . ! ! ! இ த ற் கு க டு ப் பா ன த னு ஷ் எ ன் ன சொ ன் னா ர் தெ ரி யு மா . . . ! ! !

0

இசைஞானி இளையராஜாவின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி சென்னை தீவுத் திடலில் நடைபெற்று வருகிறது. இந்த இசை நிகழ்ச்சிக்காக சென்னையில் இன்று மாலை 4 மணி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, முழுவீச்சில் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் ஆமோகமாக விற்றுத்தீர்ந்தது. எங்குபார்த்தாலும் தலைகளாக காணப்படும் ராக் வித் ராஜா நிகழ்ச்சியில் ராஜாவின் இசை வர்ணஜாலம் படைத்து  வருகிறது. இசைநிகழ்ச்சியின் முதல் பாடலாக ஸ்ரீ ராகவேந்திரா திரைப்படத்தில் வரும் ஜனனி ஜனனி பாடலுடன் ராக் வித் ராஜா நிகழ்ச்சி தொடங்கியது. மனோ மற்றும் எஸ்.பி.சரண் இருவரும் இணைந்து, இளையராஜாவின் என்றும் பேவரைட் பாடலான இளமை இதோ இதோ பாடலை பாடி அசத்தினர். இந்த பாடலை மனோ பாடத் தொடங்கியதும்,

அங்கிருந்த ரசிகர்கள் ஆட்டம் போடத்தொடங்கினர். பாடகர் கார்த்திக் ராக்கு முத்து ராக்கு பாடலை கொரோனா பாடலாக வரிகளை மாற்றிப்பாடி கைத்தட்டலை பெற்றார். கொரோனா பெருந்தொற்று பெரிய அளவிலான கூட்டத்திற்கு வாய்ப்பளிக்காத நிலையில், இரண்டாண்டுகளுக்குப் பின்னர் இளையராஜா மிகப்பெரிய பொதுவெளி இசை நிகழ்ச்சியில் கலக்கி வருவதை இளையராஜாவின் ரசிகர் ரசித்து வருகின்றனர். வள்ளி திரைப்படத்தில் வரும் மொல்லோடி பாடலான என்னுள்ளே என்னுள்ளே பாடலை மகாராஷ்டிரா பாடகி விபவரி பாடினார். அதுவரை ஆட்டம் போட்டுக்கொண்டு இருந்த

ரசிகர்கள் இந்த பாடலை கேட்டு அப்படியே இருக்கையில் மெய்மறந்து லாபித்து போனார்கள்.  வள்ளி படத்தில் இடம் பெற்றுள்ள இந்த பாடலை வாலியின் வரிகளில் சொர்ணலதா பாடி இருந்தார். இந்த பாடல் முடிந்தவுடன், தனுசை எழுந்திருக்கும் படி கூறிய இளையராஜா, உனக்கு இந்த பாட்டு பிடிச்சிருக்கா என்று கேட்டார். தனுஷ் ஆமாம் என்று சொல்ல, இந்த பாடலின் மகத்தான வெற்றிக்கு, உங்க மாமனார்தான் காரணம் என்று கூறினார். இதைக்கேட்ட தனுஷ் மௌனமாக சிரித்துவிட்டு, தலை ஆட்டியபடி அமைதியாய அமர்ந்தார். இந்நிகழ்ச்சிக்கு தனுஷ் தனது இரு மகன்களை அழைத்து வந்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.