தி டீரெ ன வீ ட் டை வி ட் டு வெ ளி யே றி வே று இ ட த் தி ற் கு குடி பு கு ந் த ச ம ந்தா . . . ! ! ! எ ன் ன வி ஷ ய ம் எ ன் று உ ங் க ளுக்கு தெரி யு மா . . . ? ? ? அது தெறிச் ச நி ங் க அ ப் ப டி யே ஷா க் கா யி டு வீ ங் க . . . !! !

0

நடிகை சமந்தா ஹைதராபாத்தில் தனியாக ஒரு வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், அந்த வீட்டை விட்டு தற்காலிகமாக வெளியேறி வேறு ஒரு இடத்தில் தங்கி வருவதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.இந்த திடீர் முடிவை நடிகை சமந்தா எடுப்பதற்கு பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் இருப்பது தான் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் என நடிகை சமந்தா பறந்து பறந்து நடிப்பு மற்றும் மற்ற விஷயங்களை கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.சென்னை பொண்ணான நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு ஆந்திராவின் மருமகள் ஆகிவிட்டார். ஆனால், கடந்த ஆண்டு நடிகர் நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் பிரிவதாக அறிவித்த நிலையில்,

நடிகை சமந்தா ஹைதராபாத்திலேயே தனியாக ஒரு வீட்டில் வசித்து வருகிறார்.
டோலிவுட்டின் மிகப்பெரிய குடும்பமான நாகார்ஜுனா குடும்பத்தில் இருந்து நடிகை சமந்தா பிரிந்த நிலையில், அவர் ஹைதராபாத்தை விட்டு மும்பையிலேயே செட்டில் ஆகிவிடுவார் என்றும் அங்கேயே ஒரு வீட்டையும் அவர் வாங்கி விட்டார் என்றும் தகவல்கள் பரவின. அதுதொடர்பாக ரசிகர் ஒருவர் சமந்தாவிடம் கேள்வி எழுப்ப, ஹைதரபாத் தான் எப்பொதுமே என் சொந்த ஊர் இங்கே தான் இருப்பேன் என்று அதிரடியாக கூறிவிட்டார்.

நடிகை சமந்தாவுக்கு டோலிவுட்டில் இனிமேல் பட வாய்ப்புகளே கிடைக்காது என பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், சகுந்தலம், யசோதா என இரு டோலிவுட் படங்களில் நடித்து வருகிறார் சமந்தா. மேலும், அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஓ சொல்றியா மாமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டு டோலிவுட் ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கவர்ந்து விட்டார் சமந்தா.  இந்நிலையில், நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக தனது வீட்டில் தங்காமல் திடீரென வேறு ஒரு இடத்தில் தற்காலிகமாக தங்கி வருவதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்தது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

அப்படி நடிகை சமந்தா எங்கே சென்று தங்கினார் என்கிற சுவாரஸ்ய தகவலும் தற்போது கசிந்துள்ளது. நடிகை சமந்தா சகுந்தலம் மற்றும் காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களின் படப்பிடிப்பை முடித்து விட்ட நிலையில், தற்போது யசோதா படத்தில் தான் நடித்து வருகிறார். அந்த படத்திற்காக போடப்பட்ட ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் செட்டை பார்த்து ஆச்சர்யமடைந்த நடிகை சமந்தா, இங்கேயே சில நாட்கள் தங்கி நடிக்கிறேன் என தனது விருப்பத்தை சொன்னதும் படக்குழு உடனடியாக சம்மதித்து விட்டார்களாம். நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் முழுக்கவே ஷாப்பிங் மாலில்

செட்டில் படமாக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகின. தளபதி 66 படத்திற்காக பிரம்மாண்ட வீடு செட் போடப்பட்டு வருகிறது எனக் கூறுகின்றனர். இந்நிலையில், சமந்தாவின் படத்திற்காக ஃபைவ் ஸ்டார் ஹோட்டலையே செட்டாக போட்டு இருக்கின்றனர், தயாரிப்பாளர்கள் வாடகை கொடுப்பதற்கு பதிலாக, இப்படி செட் போட்டால் பட்ஜெட் குறைந்து விடுகிறது என கருதுகின்றார்களோ என்கிற கேள்வியே இதன்மூலம் எழுகிறது. கலை இயக்குநர் அசோக் கொரலாத் 200 பேரை வைத்து 3 மாதங்கள் கடுமையான உழைப்பை போட்டு அந்த செட்டை உருவாக்கி இருக்கிறார்களாம்.

Leave A Reply

Your email address will not be published.