கே.எஸ்.ரவி க் குமா ர் என் கா லை பி டித் து க் கொண் டு அ ழு தா ர் … ! ! ! பி க் பா ஸ் த ர் ஷ ன் சொ ன் ன தை கே ட் டு அ தி ர் ச் சி ய டை த் த தி ரை யுல கின ர்க ள் ம ற் று ம் ர சி க ர் க ள் . . . ! ! !

0

கேஸ் ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் கூகுள் குட்டப்பா. இந்த படத்தை அவரது உதவி இயக்குனர் சரவணன் மற்றும் சபரி ஆகியோர் இயக்கியுள்ளனர். இந்த படத்தில் கேஎஸ் ரவிக்குமார், தர்ஷன், லாஸ்லியா, யோகி பாபு,சுரேஷ் மேனன், பிளாக் பாண்டி உள்பட பலர் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் ரோபோ ஒன்றும் நடித்திருக்கிறது. இந்தப் படத்தின் இசை வெளியீடு சென்னையில் இன்று நடந்தது, இதில் பேசிய படத்தின் நாயகன் தர்ஷன் கே.எஸ்.ரவிக்குமார் பற்றி சுவாரசியமான தகவலை கூறியுள்ளார். சிரஞ்சீவியின் காட்ஃபாதர் படத்தில் இணைந்த சல்மான் கான்.. என்ன ரோலில் நடிக்கப் போகிறார் தெரியுமா? ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் ஆன்ட்ராய்டு குஞ்சப்பன். மலையாளத்தில் இப்படம் பெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து அப்படத்தை தமிழில் கூகுள் குட்டப்பா என்ற பெயரில்

கே.எஸ் ரவிகுமாரின் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய சபரிகிரீசன் மற்றும் குரு சரவணன் ஆகியோர் இயக்கியுள்ளனர்.பல நடிகர்கள் இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார், பிக்பாஸ் பிரபலங்களான தர்ஷன், லாஸ்லியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் அவர்களுடன் யோகி பாபு, பூவையார், மனோபாலா, மாரிமுத்து, பிளாக் பாண்டி, நடிகை பவித்ரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மகிழ்ச்சியில் தர்ஷன் இத்திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய தர்ஷன். இந்த நாளுக்காக ரொம்ப நாள் காத்திருந்தேன், மகிழ்ச்சியாக இருக்கிறது.

என்னைவிட என் அப்பா,அம்மா தான் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் நிறைய விஷயங்களை எனக்கு கற்று கொடுத்தார். காலை பிடித்துக் கொண்டார் படத்தில் ஒரு காட்சியில் ரவிகுமாரின் காலை பிடித்து பேசுவது போல் ஒரு காட்சி நடிக்க வேண்டும் அந்த காட்சி எனக்கு சரியாக வரவில்லை. உடனே ரவிக்குமார் சார் டேய் இங்க வா, சேரில் உக்காரு என்று கூறி விட்டு முட்டிப்போட்டு காலை பிடித்து நடித்து காட்டினார். இதை என் வாழ்க்கையில் என்றுமே மறக்கவே மாட்டேன். இப்படி இந்த படத்தில் நிறைய மறக்க முடியாத பல அனுபவங்கள் இருக்கு என்றார்.

நெகிழ்ந்த தர்ஷன் முதல் படத்திலே ஒரு ஹீரோவுக்கு யாரும் இவ்வளவு சுதந்திரம் கொடுக்க மாட்டார்கள் அந்த அளவுக்கு இந்த படத்தில் எனக்கு முழு சுதந்திரம் கிடைத்தது. மீண்டும் இந்த வாய்ப்பு கிடைக்குமானு தெரியவில்லை. இந்த வாய்ப்பை கொடுத்த ரவிக்குமார் சாருக்கு நன்றி என்று நெகிழ்ந்து பேசினார் தர்ஷன். இந்த விழா இயக்குநர்கள் விக்ரமன், ஆர்.கே. செல்வமணி, ஆர். வி உதயகுமார், பேரரசு, கவுரவ் நாராயணன், ரமேஷ் கண்ணா, தயாரிப்பாளர் டி சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.