கு ட் நி யூ ஸ் சொன் ன ஐ ஸ்வ ர் யா வை வா ழ் த் து ம் ர சி க ர் க ள் . . . ! !! பு து க் கா த லு க் கு தே தி குறி ச் சாச் சு . . . ! ! ! அ ட க் கொ டுமை யே . . .! ம று ப டி யு மா மு டி ய ல ட சா மி . . . . ! ! !
‘முசாபிர்’ ஆல்பம் பாடலின் ரிலீஸ் குறித்த புதிய தகவலை தனது சமூக வலைத்தள பக்கங்களில் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.தனுஷை பிரிந்ததை தொடர்ந்து தனது வேளைகளில் படு பிசியாக ஈடுபட்டு வருகிறார் ஐஸ்வர்யா. அண்மையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்ட இவர், மீண்டும் உடல்நலக் குறைவு காரணாமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் ஐஸ்வர்யாவின் ‘முசாபிர்’ ஆல்பம் பாடலும் திட்டமிட்ட தினத்தில் வெளியிட முடியாமல் போனது.இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக அண்மையில் அறிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.
விவாகரத்து அறிவிப்பிற்கு பிறகு தனது வழக்கமான பணிகளுக்கு திரும்பிய ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பம் இயக்கும் வேளைகளில் இறங்கினார். இதற்காக ஐதராபாத்தில் தங்கி பணிகளில் ஈடுபட்டு வந்தார். இடையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஐஸ்வர்யா, அதன்பின்னர் சிறிது கால ஓய்விற்கு பின்னர் ‘முசாபிர்’ ஆல்பம் பாடல் தயாரிக்கும் தனது பணியில் மீண்டும் இறங்கினார்.கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஐஸ்வர்யா, மீண்டும் காய்ச்சல் மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் திட்டமிட்டபடி ‘முசாபிர்’ பாடல் வெளியிட முடியாமல் போனது.
அதனை தொடர்ந்து டீசரை மட்டும் வெளியிட்டார். திரையுலக பிரபலங்கள் பலரும் ஐஸ்வர்யாவின் ஆல்பம் பாடல் வெற்றியடைய வாழ்த்தி வருகின்றனர். இ ந் நி லை யி ல் ‘ மு சாபிர்’ பாடலின் புதிய ரிலீஸ் தேதியை தற்போது அறிவித்துள்ளார் ஐஸ்வர்யா. அதன்படி நாளை வெளியாக ஆயத்தமாகி வருவதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஆல்பம் பாடலில் நடித்துள்ள திறமையான நடிகையை பாராட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் ஐஸ்வர்யாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.