எ ன் னு டை ய வா ழ்க் கை யின் அடை யாள த் தையே மா ற் றி ய வி ஜ ய் . . .! ! ! வ ரு த்த ம டை ந் து உ ண் மை யை போ ட் டு உ டை த்த பிர ப ல ம் . . . ! ! ! இ தை கே ட் டு க ண் ணீ ர் வி ட் ட ர சி க ர் க ள் . . . ! ! !

0

இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் தனது பெயரில் ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்து அதன் மூலம் தனது வாழ்க்கையின் அனுபவங்களை பற்றி ரசிகர்களிடம் பகிர்ந்து வருகிறார். அதில் பல்வேறு நிகழ்வுகளை பற்றியும் மிகவும் சுவாரசியமாக கூறி வருகிறார்.அந்த வகையில் அவர் விஜய் பற்றிய ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தின் மூலம் விஜய் தமிழ் சினிமாவிற்கு ஒரு ஹீரோவாக அறிமுகமானார். அதை நினைவு கொண்ட சந்திரசேகர் அந்த சமயத்தில் அனைவரும் என்னுடைய மகன்தான் விஜய் என்று பெருமையாக கூறி வந்தனர். மேலும் நான் இருப்பதால்தான் விஜய் சினிமாவில் இந்த அளவுக்கு நிலைத்து நிற்கிறார் எனவும் கூறி வந்தனர். நான் இல்லை என்றால் சினிமாவில் விஜய் இல்லை என்ற பல கடுமையான விமர்சனங்களும் அந்த சமயத்தில் எழுந்தது.

இது எனக்கு கஷ்டமாக இருந்தது.ஆனால் இப்போது அந்த நிலை முற்றிலுமாக மாறிவிட்டது. சந்திரசேகர் மகன்தான் விஜய் என்று கூறிய நிலை மாறி தற்போது விஜய்யின் அப்பா தான் சந்திரசேகர் என்றும் சொல்லும் அளவுக்கு மாறிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் விஜய்யின் வளர்ச்சியும், கடுமையான உழைப்பும் தான். அதுதான் விஜய் இளைஞர்கள் மத்தியில் இவ்வளவு பிரபலம் அடைவதற்கு முக்கிய காரணம். இதை நினைத்துப் பார்க்கும்போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

விஜய் வளர்வதற்கு முன்பு என்னை வைத்த அவரை விமர்சித்தனர்.அவர் வளர்ந்த பிறகு அவரை வைத்து என்னை விமர்சித்து வருகின்றனர். இப்படி வெற்றி பெற்றாலும், தோல்வி பெற்றாலும் விமர்சிப்பது என்பது சாதாரணமாகிவிட்டது. கடுமையான உழைப்பும், திறமையும் இருந்தால் யார் வேண்டுமானாலும் சாதிக்க முடியும் அதற்கு இதுவும் ஒரு உதாரணம். இவ்வாறு சந்திரசேகர் தன்னுடைய மகனை பற்றி கூறியிருக்கிறார். இதற்கு அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.