இந் த சூ ழ லி லு ம் பு ன்ன கை க் கி றோ ம் .. . ! ! ! ர ஷ் ய ப் ப டை க ளை எ தி ர் த் து க் க ள மி ற ங்கி ய பி ர ப ல ந டி க ர் ப லி . . . ! ! ! யா ர் அ ந் த ந டி க ர் தெ ரி யு மா . . . ? ? ? பு கை ப் பட த் தை பா ர் த் து அ ட இ வ ர எ ன் ற அ தி ர் ச் சி யி ல் ர சி க ர் க ள் …!!!

0

இந்த சூழலிலும் புன்னகைக்கிறோம்..!’ – ரஷ்யப் படைகளை எதிர்த்துக் களமிறங்கிய உக்ரைன் நடிகர் பலி உக்ரைனுக்கு ஆதரவாக ராணுவத்தில் இணைந்து போராடிய அந்நாட்டு நடிகர் பாஷா லீ ரஷ்யாவின் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார்.உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், 18 முதல் 60 வயது வரை உள்ள இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்து கொள்ளலாம் என உக்ரைன் அதிபர் அழைப்பு விடுத்திருந்தார். இவரின் அழைப்பை ஏற்று ஏராளமானோர் ராணுவத்தில் இணைந்து கொண்டனர். அந்த வகையில், பாஷா லீ (33) என்ற நடிகர் கடந்த வாரம் உக்ரைன் ராணுவத்தில் இணைந்தார். இர்பின் நகரில் கடந்த 6-ம் தேதி நடைபெற்ற போரில் பாஷா லீயும் பங்கேற்றிருந்தார்.

அப்போது ரஷ்யப் படைகளின் குண்டு வீச்சுத் தாக்குதலில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பாஷா லீயின் மரணத்தை உக்ரைன் பத்திரிகையாளர் சங்கமும், ஒடேசா சர்வதேச திரைப்பட விழாவின் உறுப்பினர்களும் உறுதி செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அந்நாட்டு மக்களிடத்தில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பாஷா லீ ஏராளமான திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். `தி ஹாபிட்’, `தி லயன் கிங்’ ஆகிய படங்களுக்கு டப்பிங் வேலைகளையும் செய்துள்ளார்.

பாஷா லீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த சனிக்கிழமையன்று, “கடந்த 48 மணிநேரமாக ரஷ்ய ராணுவத்தை எதிர்த்து உக்ரைன் வீரர்கள் போராடியதை கண் முன்னே காணமுடிந்தது. இந்த சூழலிலும் நாங்கள் புன்னகைக்கிறோம். உக்ரைனுக்காக தொடர்ந்து போராடுவோம்” என பதிவிட்டிருந்தார். பாஷா லீயின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.