சற் று மு ன் ர யி லி ல் இ ரு ந் து த வ றி வி ழு ந் து பு ஷ் பா ப ட ந டி கை ம ர ண ம் . . . ! ! ! ர சி க ர் க ளி டை யே பெ ரு ம் ப ர ப ர ப் பை ஏ ற் ப் ப டு த் தி யு ள் ள து . .. ! ! ! பெ ரு ம் அ தி ர் ச் சி யி ல் தி ரை யு ல க ம் . . . ! ! !

0

ரயிலில் இருந்து கீழே விழுந்து புஷ்பா பட நடிகை பலியான சம்பவம் திரையுலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கு சினிமா வட்டாரத்தில் சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டு இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி இருந்த படம் புஸ்பா. இயக்குனர் சுகுமார் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர்களுடன் படத்தில் பகத் பாசில், சுனில் அனுசியா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஆந்திர பகுதியில் நடைபெறும் செம்மர கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது.

மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகி உள்ளது. அதோடு இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தது. இந்நிலையில் இந்த படத்தில் ஒரு பாடலில் டான்ஸராக நடனமாடியவர் ஜோதி ரெட்டி. இவர் ஆந்திராவை சேர்ந்தவர். இவர் ஹைதராபாத்தில் உள்ள வங்கி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். பின் சினிமா மீது உள்ள ஆசை காரணமாக படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் இவர் ரயிலில் இருந்து கீழே விழுந்து பலியாகிய சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகை ஜோதி ரெட்டி தன்னுடைய சொந்த ஊரில் சங்கராந்தி பண்டிகையை கொண்டாடி இருந்தார். பின் பண்டிகை கொண்டாடி விட்டு ஐதராபாத்துக்கு திரும்பியுள்ளார். கடப்பாவில் இருந்து ஹைதராபாத்திற்கு ஜோதி ரயில் மூலம் பயணித்திருக்கிறார்.

அப்போது ஹைதராபாத்தில் உள்ள கச்சிகுடா ஸ்டேஷனுக்கு செல்லும் வழியில் அவர் அசந்து தூங்கியுள்ளார். தூக்க கலக்கத்தில் ஜோதி கச்சிகுடா ஸ்டேஷனுக்கு பதில் ஷாட் நகர் ரயில் நிலையத்தில் இறங்கி உள்ளார். பின் ரயில் நிலையத்திலிருந்து அந்த ஊர் பெயர் பலகையை பார்த்ததும் தான் தவறாக ஸ்டேஷனில் இறங்கி விட்டதை உணர்ந்த ஜோதி மீண்டும் ரயிலில் ஏற முயற்சித்தார். அப்போது ரயில் கிளம்பிய நிலையில் ஜோதி ஓடி சென்றிருக்கிறார்.

இருந்தும் ஜோதி ரயிலில் ஏற முயன்ற போது தவறி பிளாட்பாரத்திற்கு ரயிலுக்கும் இடையில் சிக்கி கீழே விழுந்து உள்ளார். இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்த ரயில்வே ஊழியர்கள் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த ஜோதியை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருக்கின்றன. ஆனால், ஜோதி ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.  மேலும், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே ஜோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தற்போது அவருக்கு 26 வயதாகிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் உயிரிழந்த சம்பவம் தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், ஜோதி மரணத்தில் மர்மம் இருப்பதாக நினைத்து உறவினர்கள் ஜோதி உடலை வாங்க மறுத்து ரயில்வே நிலையத்தில் சிசிடிவி ஆதாரம் கேட்டு போராட்டம் செய்து இருக்கிறார்கள். பின் ரயில்வே அதிகாரிகள் எதுவும் இல்லை என்று சொன்னவுடன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தது உள்ளார்கள்.

இது தொடர்பாக போலீஸ் விசாரித்ததில் ரயில்வே நிலையத்தில் சிசிடிவி இல்லை என்று கூறப்பட்டது. உண்மையிலேயே அந்த இளம் நடிகை தூக்கக்கலக்கத்தில் தான் தவறி விழுந்து இறந்து போனாரா? அல்லது வேறு யாராவது தள்ளி விட்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அது மட்டுமில்லாமல் நடிகையின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

 

 

Leave A Reply

Your email address will not be published.