ந டிகை யா க அ றி மு க மா கி த ற் போ து ப ல ரி ன் வா ழ் க் கை யை கா ப் பா ற் றி க் கொ ண் டிரு க் கு ம் இ ந் த ந டி கை யா ருன் னு தெரி யு மா . . . ?? ? அ ட இ வங் க ளா எ ன்று ஆ ச் சா ர் யா மா ன ர சி க ர்க ள் . . . ? ? ? இ ப் போ எப் ப டி இ ரு க் காங் க னு நி ங் களே பா ரு ங் க ள் .. . !! !

0

தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி பின் குணச்சித்திர கதாபத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். லட்சுமி ராமகிருஷ்ணன் என்பவர் இந்தியாவைச் சேர்ந்த திரைப்பட நடிகையும், இயக்குனரும் ஆவார். 2006 ஆம் ஆண்டில் மலையாளத்தில் அறிமுகமானார். தமிழ் திரைப்படத் துறையில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 2008ல் பிரிவோம் சந்திப்போம் என்ற படத்தில் நடிகையாக ஆரம்பித்து, அதன்பின் இயக்குநர் அவதாரமும் எடுத்தார்.இவர் ஆடை வடிவமைப்பாளரும், நிகழ்வு மேலாளரும் ஆவார். இவர் திரைப்படத்துறையில் தடம் பதிக்கும் முன்னர் 1992 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை ஓமானில் மஸ்கட் நகரில் இவரது நிகழ்வு மேலாண்மை வணிகத்தை நடத்தி வந்தார்.

2008 ஆம் ஆண்டில் தி ஆபிசர் என்ற மலையாள நாடகத்தொடரிலும், ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் அவள் என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சொல்வதெல்லாம் உண்மை என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் 1500 அத்தியாயங்களை தொகுத்து வழங்கினார். மேலும் இவர் 25இற்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார்.2012 ஆம் ஆண்டில் ஆரோகணம் என்ற திரைப்படத்தை இயக்கினார் .

இத்திரைப்படம் இயக்குனாராக இவரது முதல் திரைப்படம் ஆகும். உளநோய் தொடர்பான இப்படத்திற்காக பாராட்டப்பட்டார் . இந்த்ப் படம் 7 வது விஜய் விருதுகளில் சிறப்பு ஜுரி விருதை வென்றது. மேலும் நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். அம்மணி, அவுஸ் ஓனர் உள்ளிட்ட சில படங்களை இயக்கவும் செய்துள்ளார்.

இதையடுத்து சினிமா தவிர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றி வந்தார்.2007 ஆம் ஆண்டில் ஆசிநெட் திரைப்பட விருதுகளில் சிறந்த குணச்சித்திர நடிகைக்காக பரிந்துரை பெற்றார். 2011 ஆம் ஆண்டில் உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தின் துணை நடிகைக்கான தமிழ்நாட்டு மாநில விருதை வென்றார். 2012 ஆம் ஆண்டில் எடிசன் விருதை வென்றதுடன், விஜய் விருதுகளில் துணை நடிகைக்கான பரிந்துரையைப் பெற்றார்.

2017 ஆம் ஆண்டில் சாகோபினேட் சுவர்கராஜ்யம் என்ற மலையாள திரைப்படத்தில் துணை வேடத்தில் நடித்தமைக்காக ஆசிநெட் திரைப்பட விருதுகள், பிலிம்பேர் விருதுகளிலும் பரிந்துரைகளைப் பெற்றதோடு 6வது இந்திய பன்னாட்டுத் திரைப்பட விருதுகளில் துணை நடிகைக்கான விருதை வென்றார்.

பிரபல தொலைக்காட்சி நடத்திய சொல்வதெல்லாம் உண்மை பல ர்ச்சைகளுக்கு மத்தியில் நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து வேறொரு தொலைக்காட்சியில் அதே மாதிரியான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் 50 வயதான லட்சுமி ராமகிருஷ்ணன் 37 வயதில் அவரின் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.