வடி வே லு வி ன் நா ய் சே க ர் ரி ட் ட ன் ஸ் தி ரை ப் ப ட த் தி ல் கு க் வி த் கோ மா ளி பி ர பல மா . . . ? ? ? அவ ங் க யா ரு ன் னு உ ங் க ளு க் கு தெ ரி யு மா . . . ? ? ? அ ட இ வ ங் க ள எ ன் று பு கை ப் ப ட த் தை பா ர் த் து ஷா க் கா ண ர சி க ர் க ள் . . . ! ! !

0

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக இருந்து வந்த வடிவேலு இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார்.அந்த திரைப்படம் ரசிகர்கள் ஹீரோவாக நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதை தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். பத்தாண்டுகளுக்கு முன் தேர்தல் பிரசாரத்தில் திமுகவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்திருந்த வடிவேலு, அதன்பிறகான நிகழ்வுகளால் மனம் நொந்து போனார்.இவர் திமுகவுக்காக பிரசாரம் செய்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று விட்ட நிலையில், தொடர்ந்து வடிவேலுவை படங்களுக்குக் கமிட் செய்வதில் தயாரிப்பாளர்கள், மற்றும் இயக்குநர்கள் தயங்கியதாலேயே நடிப்பிலிருந்து ஒதுங்க வேண்டிய நிலை வந்தது.

​​​வைகைப்புயல் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட வடிவேலு கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். இரண்டாம் புலிகேசி பட விவகாரத்தில் ஷங்கருடன் ஏற்பட்ட பிரச்சனையில் அவருக்கு தடை விதிக்கப்பட்டு நடிக்காமல் இருந்தார். தற்போது பிரச்சனை முடிக்கப்பட்டுள்ளதால் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

சுராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தை லைக்கா தயாரிக்கவுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் இப்படத்தின் பாடல்கள் உருவாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின். ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் வடிவேலு கெத்தாக அமர்ந்திருக்க, சுற்றி சில நாய்கள் இருக்கின்றனர். அதனால் இந்த படம் நாய்கள் குறித்த கதைக்களமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இப்படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இப்படத்தின் படப்பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் படப்பூஜை நடைபெற்ற நிகழ்வின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் ஐதராபாத்தில் துவங்கவுள்ளது.

இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் டிவியின் பிரபலம் சிவாங்கி, நடிகர் ஆனந்தராஜ் மற்றும் விஜய் விக்னேஷ் காந்த் பலரும் இணைந்து நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இந்த திரைப்படத்தின் கலந்து கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.