ஆசை வா ர்த் தை யை நம் பி ப ல ல ட் ச ங் க ளை இ ழ ந் து ள் ள ந டி கை சி னே கா … ! ! ! உ ண் மை யா க ந ட ந் த து எ ன் ன தெ ரி யு மா . . . ? ? ? ர சி க ர் க ளிடை யே பெ ரு ம் அ தி ர் ச்சி யை ஏ ற் ப டு த் தி ய து . . . ! ! !

0

அதிக வட்டி தருவதாக கூறிய ஆசை வார்த்தையை நம்பி நடிகை சினேகா ரூ 26 லட்சத்தை இழந்துள்ளார். இது தொடர்பாக தனியார் சிமெண்ட் நிறுவன உரிமையாளர்கள் மீது நடிகை சினேகா மோசடி புகார் அளித்துள்ளார். பிரபல தமிழ் நடிகையான சினேகா, சென்னை அடுத்த கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கவுரி சிமெண்ட் அண்ட் மினரல் என்ற நிறுவனத்தின் உரிமையாளர்கள் சந்தியா, சிவராஜ், கவுரி ஆகியோர் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக நம்பிக்கை தரும் விதத்தில் பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.

26 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியதாக சினேகா தெரிவித்துள்ளார். இதனை நம்பி 25 லட்சம் ரூபாயை ஓன்லைன் மூலமாகவும், 1 லட்சம் ரூபாயை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் வைத்து வழங்கியதாகவும் சினேகா குறிப்பிட்டுள்ளார்.

முதலீடு செய்த ஒரு மாதத்திற்கு பிறகு வட்டி தொகை கேட்ட போது அதனை தர மறுத்து தன்னை மிரட்டியதாக காவல்துறையில் அளித்துள்ள புகாரில் நடிகை சினேகா தெரிவித்துள்ளார். இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.