அம் மா வை ப ற்றி அ ப் பா த வ றாக பே ச வே மா ட் டா ர் . . . ! ! ! 2 0 ஆ ண் டு க ளுக் கு மு ன் ன ர் பி ரி ந்த ரா ம ரா ஜ ன் . . .! ! ! ந ளி னி குறி த் து உண் மை யை உ டை த்த அ வர் க ளது மக ள் .. . ! ! ! ர சிக ர் க ளி டை யே பெ ரு ம் அ திர் ச்சி அ டை த் துள் ளன . .. !! !

0

20 வருடங்களுக்கு முன்னர் விவாகரத்து பெற்று பிரிந்த நடிகர் ராமராஜன் – நடிகை நளினி தம்பதி குறித்து அவர் மகள் அருணா உருக்கமாக பேசியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர், நடிகையாக விளங்கிய ராமராஜன் – நளினி ஆகிய இருவரும் கடந்த 1987ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2000ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுக்கு அருணா, அருண் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதில் அருணா பிரபல தனியார் வங்கியில் வழக்கறிஞராகப் பணிபுரிகிறார்.

அவர் அளித்த பேட்டியில், அப்பாவிடம் கிராமத்தார்களுக்கே உரிய அந்த மரியாதையைப் பார்க்கலாம். வீட்டுக்கு யார் வந்தாலும் எழுந்து, வணக்கம் சொல்லி, தண்ணீர்கொடுத்து உபசரிக்கணும்னு சொல்வார். அம்மாவும் அப்பாவும் பிரியும்போது நானும் தம்பியும் ஏழாம் வகுப்பு படித்தோம். எங்கள் முன்னால் இருவரும் சண்டையே போட்டதில்லை. பிரிவு என்பது அவர்கள் இருவரும் பேசி எடுத்த முடிவு. அதை எங்களுக்கு புரியவைத்தனர்.

அம்மாவைப் பத்தி அப்பாவோ, அப்பாவைப் பத்தி அம்மாவோ எங்ககிட்ட ஒரு வார்த்தைகூட தப்பாக பேசினதில்லை. விவாகரத்து நாளில் நீதிமன்றத்தில் அம்மா மயங்கிவிழுந்துட்டாங்க. அப்பா தான் அம்மாவைத் தூக்கினார். அப்போது நீங்கள் நிஜமாவே விவாகரத்துக்கு வந்தீர்களா என நீதிபதியே ஆச்சரியப்பட்டார். அந்தச் சூழல்லயும் அவங்களுடைய அன்பு குறையவில்லை என கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.