ஒருகையில் பணம்…இன்னொரு கையில் கோழிக்குஞ்சு.. சிறுவன் பரிதப்பின் சுவாரஸ்ய கதை இதுதான்..!

0

கடந்த இரண்டு தினங்களாக இணையதளத்தில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.ஒரு கையில் கோழிக் குஞ்சும், மற்றொரு கையில் பத்து ரூபாய் நோட்டுடனும் சிறுவன் ஒருவர் பாவம் போல் அந்த புகைப்படத்தில் நிற்கிறார்.மிசோரம் மாநிலம் சைரன் பகுதி தான் அந்த சிறுவனின் ஊர். இந்த சிறுவன் தனது வீட்டுப் பக்கத்தில் சைக்கிள் ஓட்டிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது பக்கத்து வீட்டு கோழிக் குஞ்சு சைக்கிளுக்கு குறுக்கே பாய்ந்து கா யம்பட்டு விட்டது.

இதனைப் பார்த்ததும் பயந்து போன அந்த சிறுவன் தன் கையில் இருந்த பணத்தையும், இன்னொரு கையில் கோழிக் குஞ்சையும் தூ க்கிக் கொண்டு பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு ஓடியுள்ளார். .இதை மருத்துவமனையில் பார்த்த சங்கா என்பவர் பொடியன் ஒரு கையில் காசையும், இன்னொரு கையில் கோழிக்குஞ்சையும் வைத்து இருக்கும் படத்தை சங்கா என்பவர் முகநூலில் போட்டார்.

இந்த படம் ஒரு லட்சம் லைக்கையும், 85 ஆயிரத்துக்கும் அதிகமான சேர் ஆகியுள்ளது. மனிதர்களுக்கு வி பத்தில் சிக்கியவர்களை காக்க வேண்டும் என்னும் செய்தியையும் சேர்த்தே கடத்துகிறது இந்த படம்!

Leave A Reply

Your email address will not be published.