அந்த குப்பை ஷோவிற்கு போகமாட்டேன்… எச்சில் தட்டு, பாத்ரூம் கழுவ அவசியம் இல்லை! பிக்பாஸ் குறித்து லெட்சுமி மேனன்

0

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து லட்சுமி மேனன் சொல்லியுள்ள கருத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக சினிமாவில் வலம்வரும் நடிகை லட்சுமி மேனன். இவர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு அறிமுகமான கும்கி படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.கும்கி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்திற்காக இவருக்கு பல்வேறு விருதுகளும் குவிந்தது. தற்போது படவாய்ப்புகள் குறைந்த நிலையில், அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் சில புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார்.

மேலும் இவர் பிக் பாஸில் கலந்துகொள்ள போவதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், இதுகுறித்து நடிகை லட்சுமி மேனன், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை போட்டிருந்தார். அதில், நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறவில்லை நான் மற்றவர்களின் எச்சி தட்டை கழுவவோ மற்றவர்களுக்காக கழிவறை கைகழுவவோ எப்போதும் மாட்டேன். அதேபோல நிகழ்ச்சி என்ற எப்போதும் கேமராவுக்கு முன்னால் ச ண்டை போடவும் மாட்டேன்.

இந்த குப்பை நிகழ்ச்சியில் செல்ல போகிறேன் என்று யாரும் என்னிடம் பேச்சை எடுத்து வராதீர்கள் என்று கூறியிருக்கிறார். லட்சுமி மேனனின் இந்த கருத்து ரசிகர்களை கொஞ்சம் கோ ப மாகியுள்ளது. பிக் பாஸில் கலந்துகொள்வதும் கலந்து கொள்ளாததும் அவரவர் விருப்பம். ஆனால், அதை சொல்லும் முறை என்று இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.