செய்தி வாசிக்கையில் வந்த அறிவிப்பு.. தலையிலிருந்த பூவை எடுத்த நிர்மலா பெரியசாமி ..!

0

செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரிய சாமி சிவாஜி கணேசன் மரண செய்தியை வாசிக்கையில் தலையிலிருந்து பூவை எடுத்துள்ளதை பல ஆண்டுகள் கழித்து தற்போது வெளியிட்டுள்ளார்.நிர்மலா பெரியசாமி
செய்தி வாசிப்பாளராக மக்கள் மனதில் இடம்பிடித்தவர் தான் நிர்மலா பெரியசாமி. இவர் சிரித்த முகத்துடன் செய்தி வாசிப்பது மட்டுமின்றி, கடைசியாக இவர் கூறும் வணக்கம் என்ற வார்த்தை தற்போதும் யாராலும் மறக்கமுடியாத மட்டுமின்றி இவருக்கு ஒரு அடையாளமாகவும் இருந்தது.

பின்பு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். தற்போது பல ஆண்டுக்கு பின்பு தற்போது பேட்டி ஒன்றினை கொடுத்துள்ளார். இதில் அவர் செய்தி வாசிப்பாளராக இருக்கும் போது சந்தித்த மனநெருக்கடியை குறித்து பேசியுள்ளார்.

செய்தி வாசிக்கும் வேலையை நேசித்து செய்த இவர், சில சோகமான செய்தியை வாசிக்கும் போது மனம் உடைந்துவிடுவாராம்.பூவை எடுத்த நிர்மலா பெரியசாமி
சம்பவத்தன்று புது புடவை, பூ என அலங்காரம் செய்துவிட்டு செய்தி வாசிக்க சென்றுள்ளார் நிர்மலா பெரியசாமி. அப்பொழுது பாதி செய்தி வாசித்துக் கொண்டிருந்த போது, சிவாஜி இறந்த செய்தியை வாசிக்க நேர்ந்துள்ளது.

அப்பொழுது சிவாஜி கணேசனை அதிகமாக இவருக்கு பிடிக்குமாம். அப்பொழுது அலங்காரத்துடன் இருந்த இவர், தனது தலையில் இருந்த பூவை எடுத்து வைத்துவிட்டு அந்த செய்தியை கனத்த இதயத்துடன் வாசித்தாராம்.

இது போன்று சில விபத்து செய்தியை படிக்கும் கஷ்டப்படவும், சில சந்தோஷமான செய்திகளை வாசித்து பல ஆண்டுகள் கழித்து அவர்கள் நேரில் சந்தித்து பெருமையாக பாராட்டவும் செய்திருப்பதாக கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.