அக்கா பவதாரணியை மறக்கமுடியாமல் யுவன் வெளியிட்ட புகைப்படம்! இதில் இப்படியொரு ரகசியமா?

0

இளையராஜாவின் மகளும் பிரபல பின்னணி பாடகியுமான பவதாரணியின் மறைவை மறக்கமுடியாமல் அவரது தம்பியும், இசையமைப்பாளருமான யுவன் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.பாடகி பவதாரணி
பிரபல இசையமைப்பாளரின் மகளும், பின்னணிப் பாடகியுமான பவதாரணி(47) புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் 25ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.பவதாரணியின் மறைவிற்கு திரையுலகினர் பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தியதுடன், அவர் பாடி தேசிய விருது பெற்ற மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலை பாடி பவதாவை உறவினர்கள் வழியனுப்பினர்.

பவதாரணி 2005ம் ஆண்டு சபரி ராஜ் என்பவரை திருமணம் செய்ததுடன், இவருடன் இலங்கையில் வாழ்ந்து வந்தார்.இவரது மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், குடும்பத்தினர் இன்னும் மீளாமல் இருந்து வருகின்றனர்.

யுவன் வெளியிட்ட புகைப்படம்
இந்த நிலையில் பவதாவின் தம்பியும், இசையமைப்பாளருமான யுவனுக்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். பவதா உடன் எடுத்த புகைப்படத்தினை யுவன் வெளியிட்டு கேப்ஷன் கொடுததுள்ளார்.பவதாரிணி இறந்து ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில், யுவன் தன்னுடைய மகள் மற்றும் அக்காவுடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

இதில் குழந்தையின் புகைப்படத்தை காட்டாமல் முகத்தில் ஒரு இமேஜை வைத்து மறைத்திருக்கிறார். இதனை அவதானித்தால் குழந்தையின் பிறந்தநாள் விழா போன்று காணப்படுகின்றது.

தானும் தன்னுடைய அக்கா மற்றும் குழந்தை மூன்று பேரும் மட்டுமே கொண்டாடிய சின்ன பார்ட்டி என்று அந்த புகைப்படத்திற்கு யுவன் கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.

அதாவது தன்னுடைய குடும்பத்தினர்கள் யாரும் இல்லாவிட்டாலும் தானும் தன்னுடைய அக்கா தன் குழந்தை மூன்று பேரும் மட்டுமே நாங்கள் அந்த பார்ட்டியை கொண்டாடி இருந்தோம் என்று யுவன் கூறி இருக்கிறார்.இந்நிலையில் தன்னுடைய அக்கா குறித்து அவர் வெளியிட்ட பதிவுக்கு பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.