நடந்து முடிந்த நிச்சியதார்தம்.. மகனின் திருமணத்தை பார்க்காமலேயே மறைந்த விஜயகாந்த்.. திருமணம் நடக்காமல் இருக்க இதுதான் காரணமா?

0

கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் வெற்றிக் கொடி நாட்டி நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை நடித்து, பிறகு அரசியலிலும் கால் பதித்து மக்களால் விரும்பப்பட்ட ஒரு நபர் விஜயகாந்த். கடந்த சில வருடங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த 28-ம் தேதி அதிகாலை உயிரிழந்தார். பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதற்கிடையில் சில வருடங்களுக்கு முன்பு விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு திருமண நிச்சயம் நடைபெற்றது. கீர்த்தனா என்பவருடன் அவருக்கு நிச்சயம் நடைபெற்றது.

விஜயகாந்த்துக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால் அவரின்றி, பிரேமலதா மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் தான் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். மேலும் அவர்களது திருமண நிச்சய புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. ஆயினும் நீண்ட வருடங்களாக இவர்களது திருமணம் நடைபெறாமல் இருந்ததற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், உண்மையான காரணமாக விஜயகாந்தின் உடல்நிலை தான் இருந்தது.

இது ஒருபக்கம் இருந்தாலும் மோடியின் தலைமையில் தனது மகனின் திருமணத்தை நடத்த விஜயகாந்த் விரும்பியதாகவும் ஆனால் அதற்கான தேதிகள் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இருந்தாலும் விஜயகாந்த்தின் உடல்நிலை தொடர்ந்து மோசமானதாலும்; அவரை தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டிய நிலையும் இருந்ததால் அவர்களது திருமணம் தள்ளிப் போனது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.