கோலாகலமாக நடந்து முடிந்தது விஜயகுமார் பேத்தியின் திருமணம்… வைரலாகும் காணொளி..!

0

சினிமா பிரபலங்களை பொருத்தவரையில் நடிகர் விஜயகுமார் குடும்பத்திற்கு எப்போதும் தனி இடம் கொடுக்கப்படுகின்றது.நடிகர் விஜயகுமார்
தமிழ் சினிமாவில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வரும் ஒரு மாபெரும் நடிகர் தான் விஜயகுமார்.இவரின் குடும்பத்தை சேர்ந்த அனைவருமே நடிப்புத் துறையில் பயணித்திருந்தாலும் அனிதா விஜயகுமார் மாத்திரம் தனக்கென வேறு பாதையை தெரிவுசெய்துக் கொண்டார்.

நடிகர் விஜயகுமாரின் மனைவிகள் இருவருக்கும் பிறந்த குழந்தைகள் தான் அனிதா விஜயகுமார், கவிதா விஜயகுமார், அருண் விஜய், பிரீத்தா விஜயகுமார், ஸ்ரீதேவி விஜயகுமார் மற்றும் பிக் பாஸ் பிரபலம் வனிதா விஜயகுமார்.

இவர்களின் இரண்டாவது சகோதரி தான் அனிதா விஜயகுமார், தற்பொழுது வெளிநாட்டில் தனது கணவருடன் வாழ்ந்து வரும் அனிதா விஜயகுமார் மருத்துவராக பணிபுரிந்து வருகின்றார்.பேத்தியின் திருமணம்
விஜயகுமார் மகள் அனிதா, கோகுல் கிருஷ்ணன் என்ற மருத்துவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

கடந்த ஆண்டு அனிதா விஜயகுமாரின் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில் அனிதாவின் மகள் தியாவின் திருமணம் இன்று 19ஆம் திகதி கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

இந்த திருமணத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.குறித்த காணொளி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

 

 

View this post on Instagram

 

A post shared by Diya Gokul ✨🤍 (@diyagokul.fp)

Leave A Reply

Your email address will not be published.